3 மணி நேரம் ஹெலிகாப்டர் தாமதம்: தேர்தல் கமிஷனிடம் மோடி புகார்
இதனால், 3 மணி நேரம் தாமதமாக பரேலி வந்து சேர்ந்த மோடி, பின்னர் மக்களிடம் தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், தனது விமான புறப்பாடு தாமதமாவது குறித்து தேர்தல் கமிஷனிடம் மோடி புகார் செய்துள்ளார். இது குறித்து தேர்தல் கமிஷன் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இருப்பினும் ஹெலிகாப்டர் புறப்பட காலதாமதம் ஆனதற்கு மோடி பயணத்தை ஏற்பாடு செய்து இருந்த அகமதாபாத்தை சேர்ந்த கார்னாவதி விமான போக்குவரத்து நிறுவனம் தான் காரணம். டெல்லி விமான நிலையத்தில் கிளம்புவதற்கு 10 நிமிடத்திறகு முன்னர்தான் தங்களது விமான பயண திட்டத்தை சமர்பித்தது. இதனால் தான் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் அனுமதி அளிக்க மறுத்தது என்று விமான போக்குவரத்து துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.