பெண்களின் நிம்மதியை கெடுக்கும் சாரயக்கடைகளை ஒழிப்பதற்காகவே பாடுபட்டு வருகிறேன்: வைகோ
விருதுநகர் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் வைகோ, பெரியவள்ளிக்குளம் கிராமத்தில் பொதுமக்களிடையே பிரசாரம் செய்து பேசியதாவது:
இக்கிராமத்தை என்னால் மறக்கவே முடியாது. கடந்த மக்களவை தேர்தலின் போது முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வீட்டில் ஒரு மாதம் காலம் தங்கியிருந்துதான் பிரசார பணிகளை மேற்கொண்டேன். அந்தத் தேர்தலில் ஜெயிக்க முடியவில்லை. ஆனால், என்னால் முடிந்தளவு பொதுமக்களுக்கான சேவைப்பணியாற்றி வந்துள்ளேன். கடந்த தேர்தலை விட தற்போது கிராமங்களில் உள்ள பெண்களின் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கிறேன்.

தமிழகத்தில் பெண்களின் நிம்மதியை கெடுக்கும் சாரயக்கடைகளை ஒழிப்பதற்காகவே பாடுபட்டு வருகிறேன். மதுக்குடியால் குடும்பமே சீரழிகிறது. இதுபோன்ற காரணங்களால் பெண்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இதை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்ட போது கிராமங்களில் லட்சக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் காத்திருந்து வரவேற்றார்கள்.
கிராமங்களில் சரியான சுகாதார வசதி இல்லாத காரணத்தால், என்னால் முடிந்தளவு வைத்திய வசதியை செய்து கொடுத்தேன். ஊனமுற்ற குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை, 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு மஞ்சள் காமலை தடுப்பு ஊசி வசதியெல்லாம் ஏற்படுத்தி கொடுத்தேன். எனக்கு சாதி மத வேறுபாடு எல்லாம் கிடையாது என்றார்.