நைஜீரியாவில் 200 பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம். முஸ்லீம் தீவிரவாத இயக்கம் வெறியாட்டம்.
நைஜீரிய கல்வி அமைச்சர் Inuwa Kubo என்பவர் Chibok நகரில் நடந்த பள்ளி மாணவிகள் கடத்தல் சம்பவத்தை உறுதி செய்தாலும், மிகச்சரியாக எத்தனை மாணவிகள் கடத்தப்பட்டார்கள் என்ற தகவல்கள் தெரியவில்லை என்றும், 100க்கும் மேற்பட்ட மாணவிகள் கடத்தப்பட்டிருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
தீவிரவாதிகள் கடத்தி சென்று கொண்டிருக்கும் போது இடையில் அவர்கள் கடத்தி சென்ற வாகனம் பழுதானதால் ஒருசில மாணவிகள் தப்பித்து வீடு திரும்பியுள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியிருப்பதால், எஞ்சிய மாணவிகளின் கதி என்னவாகியிருக்கும் என பெற்றோர்கள் அஞ்சி நடுங்கி வருகின்றனர்.
மேற்கத்திய கல்வி முறையே பாவம் உடையது என்று வலியுறுத்தி வரும் Boko Haram என்ற தீவிரவாத அமைப்பு, ஏற்கனவே மாணவிகளை கடத்தப்போவதாக மிரட்டில் விடுவித்திருந்தது. இதே தீவிரவாத அமைப்பு நேற்று நடத்திய பேருந்து நிலைய வெடிகுண்டு தாக்குதலில் 71 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. நைஜீரிய அரசு பள்ளிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்திருந்தால் இந்த கடத்தல் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என மக்கள் கருத்து தெரிவித்தனர்.