அதிமுகவில் இணைந்தார் ஜே.கே.ரித்தீஷ்

ஜெயலலிதாவை, போயஸ் கார்டனில் உள்ள அவரது இடத்தில், ராமநாதபுரம் எம்.பி., ஜே.கே.ரித்தீஷ் வியாழக்கிழமை சந்தித்தார். மேலும் ராமநாதபுரம் மாவட்ட திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் கே.நாகநாதசேதுபதி, தேமுதிக மாணவரனி முன்னாள் செயலாளர் அ.தி.செந்துரேசுவரன் ஆகியோர் சந்தித்தனர்.
இச்சந்திப்புக்கு பிறகு, ஜே.கே.ரித்தீஷ், கே.நாகநாதசேதுபதி, அ.தி.செந்துரேசுவரன் அதிமுகவில் இணைந்தனர் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.