இதுகுறித்து அவர் நாகர்கோவிலில்
பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, ''எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை 72ஆம் ஆண்டு ஆரம்பித்தார். அதில் இருந்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளின் ஆதிக்கத்துக்குள்தான் ஆட்சி இருந்து வந்துள்ளது. ஆனால், 72ஆம் ஆண்டுக்கு பிறகு நாடு முழுவதும் மோடி அலை வீசும் இந்த நேரத்தில் தமிழகத்தில் சிறப்பான அணி உருவாகியுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக முதன் முறையாக புதிய அணி உருவாகியுள்ளது. இதன் மூலம் நம்பிக்கை ஊட்டுகின்ற ஒரு நல்ல அமைப்பு உண்டாகியிருக்கிறது. வெவ்வேறு கொள்கைகள் கொண்ட பா.ஜ.க., பா.ம.க. ஓரணியில் அமையாது என தமிழகத்தில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளுமே எதிர்பார்த்தனர். ஆனால், ராஜ்நாத் சிங் உறுதியாக இருந்து கூட்டணி அமைத்துள்ளார்.
தமிழக மக்களுக்கு கருணாநிதி மீது வெறுப்பு இருந்தால் ஜெயலலிதாவுக்கு வாக்களித்து வந்தார்கள். ஜெயலலிதா மீது வெறுப்பு இருந்தால் தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்கள். ஆனால், தற்போது இரண்டு பேர் மீதும் வெறுப்பு இருப்பவர்கள் பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். எனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும்'' என்றார்.