புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2014


எஸ்.எம்.எஸ். மூலம் ஜெயலலிதா பிரச்சாரம்

தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளுக்கும் வருகிற 24–ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் நாளை மறுநாளுடன் (22–ந்தேதி) நிறைவடைகிறது. தேர்தலையொட்டி, அரசியல் கட்சியினர், செல்போன்கள் மூலமாகவும் இறுதிக்கட்ட
வாக்குசேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.


முதலமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. வுக்கு ஆதரவு கேட்டு வாக்காளர்களிடம் செல்போன் மூலமாக பேசும் வகையில் ‘‘வாய்ஸ் ரெக்கார்டர்’’ ஒன்றும் வெளியானது. திடீரென உங்களுக்கு வரும் போனில், ஜெயலலிதா பேசுவார். ‘‘உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன். இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று கூறியதும் போன் இணைப்பு துண்டிக்கப்படும். இது அ.தி.மு.க.வினர் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் ஜெயலலிதா தனது செல்போனில் இருந்து அனுப்புவது போன்ற ஒரு எஸ்.எம்.எஸ்சும் செல்போனில் வலம் வர தொடங்கியுள்ளது. வணக்கம், இந்தியாவை வல்லரசாக்க 40/40 என்ற இலக்கை அ.தி.மு.க. அடைய ‘‘இரட்டை இலை’’ சின்னத்துக்கு வாக்களியுங்கள். அன்புடன் ஜெ.ஜெயலலிதா, அ.தி.மு.க. பொதுச் செயலாளர்’’என்று கூறப்பட்டுள்ளது.

ad

ad