''அதைச் செய்றோம்... இதைச் செய்றோம்னு சொல்லி ஓட்டு கேட்கிறதே உங்க ரூட்டு. இதைச் செஞ்சோம்... அதைச் செஞ்சோம்னு சொல்லி என்னைக்குக் கேட்பீங்க ஓட்டு?''
''மண் சட்டில முளைச்சா அது செடி சார்... மண்டையில முளைச்சா அது முடி சார். ஏய்ய்ய்ய்ய்... ஹெலிகாப்டர் ஷாட் அடிக்கிறது தோனி,நன்றி விகடன் மேல ஏற உதவுறது ஏணி, 50 வருஷமா நீங்க கொடுத்த வாக்குறுதிகள்ல புடுங்காம இருக்கு பல ஆணி!'' - 'அரசியல் கட்சிகள் அளிக்கும் தேர்தல் வாக்குறுதி பத்தி கருத்து சொல்லுங்க’னு கேட்டா, நம்ம டி.ஆர் இப்படிலாம் பொங்கிப் பூரிப்பாப்ல. அந்த அளவுக்கு புளிச்சுப்போன ஒரே வாக்குறுதிகளைக் கொடுக்கிற உங்களுக்கும் வெட்கம் இல்லை... சலிக்காம அதைக் கேட்கிற எங்களுக்கும் ரோஷம் இல்லை!
நம்மாளுங்க மீனைப் பிடிக்கப் போனாக்கா, இலங்கைக்காரன் நம்ம மீனவர்களையே பிடிச்சுட்டுப் போறான். 'மீனவர் நலன் காப்போம்’னு 30 வருஷமா சவுண்டு விடுறீங்களே, கூகுள்ல தேடினாலே கண்டுபிடிக்கக் கஷ்டமான சைஸுல இருக்கிற இலங்கையை ஒரு ரவுண்டு விடுறீங்களா?
அந்நிய நாட்டுல உங்க சில்லறையை முதலீடு பண்ணிட்டு, 'சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வராமல் தடுப்போம்’னு தொண்டை கிழியக் கத்துறீங்களே... வெந்நீரைக் குடிச்சாக்கூட வெறியேத்திக்கிட்டுப் போலாம். பன்னீரைக் குடிச்சுப் பசியாத்திக்கிட்டுப் போக முடியுமாய்யா என் பக்கெட்டு?
ஒவ்வொரு தேர்தல்லயும், 'ரோடு போடுவேன்... ரோடு போடுவேன்’னு சொல்லிட்டு வர்றீங்களே, முகத்தைக் கழுவுனா மேக்கப் கலையுற மாதிரி, மழை பெய்ஞ்சாலே கரையுறதுக்குப் பேரு ரோடா? இன்னொரு தடவை ரோடு போடுவேன்னு சொல்லிட்டு வந்தீங்கனா, உங்க மூஞ்சில கோடு போட்ருவோம் நாங்க!
'கர்நாடகாவுல இருந்து நீரைக் கொண்டுவருவோம்’னு தவறாம சொல்றீங்க. ஆனா, அங்கே இருந்து கிங்ஃபிஷர் பீரைத் தவிர எதையும் நீங்க கொண்டுவந்தது இல்லை. தமிழகத்தையே தழுவி ஓடின பொண்ணுய்யா காவிரி. ஆனா, இன்னைக்கு அதோட மண்ணைக்கூட உங்காளுங்க விட்டுவெக்கிறது இல்லையே!
லட்சத்தீவை வெச்சுக்கிட்டே கேரளாக்காரங்க சந்தோஷமா இருக்காங்க. ஆனா, சொச்சச் தீவான கச்சத்தீவை வெச்சுக்கிட்டு நீங்க படுத்தற பாடு இருக்கே... அய்யையோ! லட்சத்தி ஒரு தடவையைத் தாண்டியும் சொல்லிட்டீங்கய்யா, 'கச்சத்தீவை மீட்போம்’னு. ஆனா, நீங்க முதல் முதலா சொன்னப்போ அம்மா சத்தியமா தெரியாதுய்யா, அந்த வாக்குறுதியை 30 வருஷமா கேட்போம்னு!
100 ரூபாய்க்கு குவாட்டர் அடிச்சாக்கூட ரெண்டு மணி நேரம் சுத்துதய்யா பூமி. ஆனா, 200 ரூபாய்க்கு பெட்ரோல் அடிச்சாலும் தெரு முக்கு தாண்ட மாட்டேங்குதே டூவீலர்! பெட்ரோல், டீசல் விலை எல்லாம் நடிகையோட வயசு மாதிரி நாலு வருஷத்துக்கு ஒரு தடவை ஏறினாத்தான் நாசூக்கா இருக்கும். இப்படி நாளுக்கு நாள் ஏறினா நாசமாத்தான் இருக்கும்.
'பொதைச்ச பொணத்தைத் தோண்டி எடுத்து எரிப்போம்’னு சொல்லுங்கய்யா... பொறுத்துக்கிறோம். ஆனா, கறுப்புப் பணத்தை ஒழிப்போம்னு மட்டும் சொல்லாதீங்க. புடிக்கிற மைக்ல இருந்து, அடிக்கிற பிட் நோட்டீஸ் வரை நீங்க பயன்படுத்தறது எல்லாமே கறுப்புப் பணம்தான்யா என் கருப்பட்டி!
மூணு சம்சாரத்தைக் கட்டிக்கிட்டு கஷ்டப்படுறதைவிட கொடுமையானது, மூணு மணி நேரம் மின்சாரம் இல்லாம கஷ்டப்படுறதுதான். 'ஆறு மாசத்துல மின்வெட்டு இருக்காதுனு நூறு மாசமா சொல்லிட்டு இருக்கீங்க. ஆனா, பேச்சுலர் பசங்க கரன்ட் கம்பில துணி காயப் போட ஆரம்பிச்சு பல வருசமாச்சு!
உலகத்துலயே கயமையான விஷயம் எதுன்னா, 'இலங்கைத் தமிழர்களுக்கு உரிமை கிடைக்கப் பாடுபடுவோம்’னு நீங்க சொல்றதுதான். 'சொந்த இனத்தைக் காப்பாத்துவோம்’னு ஓட்டு கேட்டு வர ஒரே இனம் நம்ம இனம்தான்யா. 'ஓட்டுக்கு இவ்வளவு நோட்டு’னு பேரம் பேசுற ஏல வியாபாரியா இருக்கிறதைவிடக் கேவலம், ஈழ வியாபாரியா இருக்கிறது!
ஆல் அரசியல்வாதிகளே... கடைசியா ஒரு வார்த்தை... அரிசியை அரைச்சா மாவு, காய்ச்சல் அடிச்சா அது நோவு, சொன்னதைச் செய்ய முடியாட்டி தயவுசெய்து அரசியலுக்கு விட்டுடுங்க லீவு... லீவு... லீவு!