கிளிநொச்சியில் காணி அபகரிப்புக்கு எதிராக நாளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில் இடம்பெறவிருந்த கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் 28 ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 26 ம் திகதி காலை 11 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளமையால்