5 ஆம் திகதி வாகனங்களில் ஒலி எழுப்பத் தடை

எதிர்வரும் ஜூன் 5 ஆம் திகதி உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கொழும்பில் பயணிக்கும் வாகனங்களின் ஹோன் அதிக சத்தம் எழுப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது கொழும்பு நகரில் வாகன ஒலி எழுப்பலை குறைக்கும் செயற்பாட்டுக்கு முதல்படியாக இருக்கும் என கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.
குறித்த நாளில் வாகன ஒலி எழுப்பல்கள் கவனிக்கப்படும் என்று மாநகரசபையின் சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.