படை ஆட்சேர்ப்பு பற்றி முறைப்பாடு எதுவுமில்லை

அரச வேலை வாய்ப்பு என்ற போர்வையில் மோசடி நடப்பதாக இதுவரை எமக்கு எந்த முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என்று அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். அண்மைக்காலமாக அரச வேலைவாய்ப்பு என்று துண்டுபிரசுரங்கள் மூலம் விளம்பரப்படுத்தி படையினர் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டு
வருவதாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக சரியான முறையில் எனக்கு தகவல்கள் கிடைக்கவில்லை கிடைத்தால் நிச்சயமாக உரிய நடவடிக்கைளை எடுப்பேன் என்றார்.