2ம் நாள் நிகழ்வு: பாலின சமத்துவம் உள்ளிட்ட ஏழு தலைப்புக்களில் நேற்று கலந்துரையாடல்
பாலினசமத்துவத்தில் காணப்படும் தடைகள் மற்றும் சமூகத்தில் காணப்படும் விழிப்புணர்வற்ற தன்மை உள்ளிட்ட விடயங்கள் குறித்து இவ்வட்டமேசை மாநாட்டில் விரிவாகக் கலந்துரையாட ப்பட்டது.
சக்தி, உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற விடயங்களில் பெண்களின் பங்களிப்பு முக்கியமாகக் காணப்படுவதாக இங்கு கருத்துத் தெரிவித்த யூகே பெண் சாரணர் மற்றும் பெண்கள் உலக அமைப்பின் பிரதிநிதி பிலிப்பா கார்ட்னர் சுட்டிக்காட்டினார். நேற்றைய இரண்டாவது நாள் நிகழ்வில் மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் கலாநிதி ஜோன் வில்லியம் ஆஷ் கலந்துகொண்டார்.
இலங்கையில் நடைபெறும் உலக இளைஞர் மாநாட்டில் பெண்கள், இளைஞர் மற்றும் சிவில் சமூகம் உள்ளிட்ட மூன்று முக்கிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தியிருப்பதாகக் கூறினார். இலங்கை ஒரு சிறந்த நாடு எனச் சுட்டிக்காட்டிய அவர், இலங்கை விஜயத்தின் ஊடாக சிறந்ததொரு அனுபவம் கிடைத்திருப்பதுடன், சொந்த நாட்டுக்குச் சென்றதொரு அனுபவம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.