"ஹலோ தலைவரே…… தமிழ்நாட்டில் திடீர்னு குண்டுவெடிச்சி பேரதிர்ச்சி உண்டாக்குது. திடீர்னு கோடை மழை பெய்து இன்ப அதிர்ச்சி தருது.'' நன்றி நக்கீரன்
""ஆமாப்பா.. தமிழ்நாட்டை நிர்வாகம் செய்கிற ஜெ., கொடநாட்டில் இருக்கிறார். தலைநகரத்துக்கு வராத சுகவாசின்னு எதிர்க்கட்சிகள் சைடிலிருந்து விமர்சனங்கள் வந்துக் கிட்டிருக்குதே..''
""இந்த விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், மே 5-ந் தேதி சாயங்காலம் கொடநாட்டிலிருந்து ரிட்டன் ஆகலாம்னு ப்ளான் போடப்பட்டது. அப்புறம், 6-ந் தேதி காலையில் வரலாம்னு ஆலோசிக்கப்பட்டு, கடைசியில் 13-ந் தேதிக்குப் பிறகு ரிட்டன் ஆகலாம்னு முடிவெடுக்கப்பட்டிருக்குது.''
""அரசுப் பணிகளோடு, கொடநாட்டில் அதிக முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்படுவது, பெங்களூரு சிறப்புக்கோர்ட்டில் நடக்கிற சொத்துக் குவிப்பு வழக்கு விவகாரம்தான். அதில் சம்பந் தப்பட்ட கம்பெனிகளை வழக்கிலிருந்து விடுவிக்கணும்னு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், எதிர்பார்த்த பலனைக் கொடுக்கலை. சிறப்புக் கோர்ட்டில் விசாரணை வேகமா போய்க் கிட்டேயிருக்குது. 10-ந்தேதியோடு அரசுத் தரப்பு வாதத்தை பவானி சிங் முடிச்சிடுவார். அதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பின் வாதம் ஆரம்பிச்சிடும்.''
""அப்படின்னா அதையடுத்து தீர்ப்புதானே?''
""சொத்துக் குவிப்பு வழக்கின் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா சீனியாரிட்டிப்படி 10-வது இடத்தில் இருக்கிறார். அதனால, டிசம்பர் மாதத்தில் அவர் ஹை கோர்ட் ஜட்ஜாகும் வாய்ப்பு இருக் குது. அதுவரைக்கும் வழக்கை இழுக்க என்ன வழின்னு கொட நாட்டில் ஆலோசிக்கப்பட்டிருக் குது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு டெல்லியில் ஏற்படும் மாற்றங்களில் தங்களுக்கு சாதகமான அரசு அமை யும்னும், அதை வச்சி இந்த வழக் கைப் பார்த்துக்கலாம்னும் நினைக் கிறாங்களாம். இதுதொடர்பான ஆலோசனைக்காக பெங்களூரிலிருந்து மர்ம நபர்கள் வந்துட்டுப் போயிருக்காங்க. அவங்களோடு, இந்த வழக்கை கவனிக்கும் தமிழக அரசு அதிகாரி ஒருத்தரும் ஆலோ சனை நடத்தியிருக்காரு.''
""தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும்ங்கிற ஆலோசனையும் நடந்திருக்குமே.''…
""அதுதான் எல்லாத் தரப்பிலும் நடக்குதுங்களே தலைவரே.. .. மக்கள் ஒரு மாற்றத்துக்காக ஓட்டுப் போட்டிருப்பாங்களா, பணத்துக்காக ஓட்டுப் போட்டிருப்பாங்களா.. மோடி அலை உண்மையிலேயே வீசுதான்னு பலவித ஆலோசனைகள் நடக்குது. கொடநாட்டிலும் இப்படிப்பட்ட ஆலோசனைகள் நடப்பதோடு, வடநாட்டுத் தலைவர்களோடும் ஜெ. தொடர்புகொண்டு பேசிக்கிட்டிருக்காரு. பா.ஜ.க கூட்டணிக்கு 220 சீட்டுக்கு மேலே கிடைக்காதுன்னு அந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்பார்ப்பு இருப்பதைப் பற்றி நம்மகிட்ட, பா.ஜ.க. சோர்ஸ்களே சொன்னதை ஏற்கனவே சொல்லியிருந்தேன். பா.ஜ.க தரப்பிலிருந்து ஜெ.வுக்கும் இந்தத் தகவல்கள் கிடைத்திருப்பதால், அ.தி. மு.க.வுக்கு 30 சீட்டுகள் கிடைக்குமாங்கிற கணிப்புக் கணக்குகள் பல கோணங்களிலும் போட்டுப் பார்க்கப்பட்டிருக் குது. ஆனா, தேர்தல் முடிவுகளைவிட கொடநாட்டில் அதிக டென்ஷனை ஏற்படுத்துவது இன்னொரு விஷயம்தான்.''
""ஓட்டுக்காக கொடுத்த பணத்தை அமுக்கிட்டாங்கன்னு அ.தி.மு.க நிர்வாகியோட லெட்டர் பேடிலேயே ஜெ.வுக்கு புகார் அனுப்பப்பட்டதை நம்ம நக்கீரனில் ஆதாரத்தோடு வெளியிட்டாங்களே, அது மாதிரியான விஷயமா?''
""கரெக்ட்டா சொல்லிட்டீங்க தலைவரே.. .. போயஸ் கார்டனிலும், தலைமைக்கழகத்திலும் மந்திரிகள் மேலேயும் நிர்வாகிகள் மேலேயும் புகார்கள் குவிஞ்சுக்கிட்டே இருக்குது. அத்தனை ஆதாரங்களையும் கொடநாட்டுக்கு அனுப்ப வேணாம்னும், யார் மேலே புகார்னு பெயரை மட்டும் அனுப்பினால் போதும்னும் சொல்லப்பட்டிருக்குதாம். புகார்கள் ஓய்ந்தபாடில்லைங்கிறதால, தலைமைக்கழகத்தி லிருந்து ஒவ்வொரு தொகுதிக்கும் கொடுக்கப்பட்ட 12சியில் கொடுக்கப்படாத பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி உத்தரவு போடப்பட்டிருப்பதால, மந்திரிகள் பலரும் வெலவெலத்துப் போயிருக்காங்க.''
""மதுரையில்கூட பணத்தை விநியோகிக்காத நிர்வாகி கள்கிட்டே அமவுண்ட்டைத் திருப்பிக் கேட்டிருக்காராமே அமைச்சர் செல்லூர் ராஜூ?''
""மதுரை தொகுதியின் அ.தி.மு.க பட்ஜெட்டுங்கிறது, தலைமைக்கழகத்திலிருந்து 12சி, வேட்பாளர் தரப்பிலிருந்து 8சி. மொத்தம் 20சி. தொகுதியில் 10 லட்சம் வாக்காளர் களுக்கு தலா 200 ரூபாய்னு விநியோகிக்கத்தான் இந்த பட்ஜெட். 10 லட்சம் பேருக்குக் கொடுத்தால், 6 லட்சம் ஓட்டுகளாவது கன்ஃபார்ம்ங்கிறதுதான் வேட்பாளர் கணக்கு. ஆனா, 40%க்கும் குறைவான வாக்காளர்களுக்குத் தான் பணம் கொடுக் கப்பட்டிருக்குது. இதைத் தெரிஞ்சதும் கடுப்பான மந்திரி செல்லூர் ராஜூ, கட்சி நிர்வாகிகளைக் கூப்பிட்டு சத்தம் போட்டு, மிச்ச பணத்தை ரிட்டர்ன் பண்ணச் சொல்லியிருக்காரு. ஒரு நிர்வாகி, பேலன்ஸ் தொகைன்னு 27எல் பணத்தைத் திருப்பிக் கொடுத்திருக்காரு. இது மாதிரி மற்ற நிர்வாகிகள்கிட்டேயும் ரிட்டன் கலெக்ஷன் நடந்ததால, மந்திரிதான் பணத்தை அமுக்கிட்டாருன்னு செல்லூர் ராஜூ மேலே ஏகப்பட்ட புகார்கள் போயிருக்குது. இதேமாதிரி, பல மாவட்டங்களிலிருந்து மந்திரிகள் மேலேயும் நிர்வாகிகள் மேலேயும் புகார்கள் போய்க்கிட்டிருக்குது.''
""தி.மு.க.வில் என்ன நடந்துக் கிட்டிருக்குது?''
""அங்கேயும் கணிப்புக் கணக்குகள் போட்டபடிதான் இருக்காங்க. கலைஞரை சந்திக்கும் கட்சி நிர்வாகிகளெல்லாம், தங்களோட தொகுதி நிலவரம் சூப்பரா இருக்குன்னு புள்ளிவிவரங்களையெல்லாம் எடுத்துவிட்டுட்டு கடைசியில், ஆளுங்கட்சி யோட பண விவகாரம்தான் கடைசி நேரத்தில் கொஞ்சம் நிலைமையை மாற்றிடு மோன்னு யோசனையா இருக்குதுன்னு சொல்றாங்க. அவங்ககிட்ட கலைஞர், என் னய்யா கடைசியில் எல்லா நிகழ்ச்சியிலும் ஜனகணமன பாடுறமாதிரி, நீங்க பண கண மன பாடி முடிக்கிறீங்கன்னு கேட்டிருக்காரு. வெற்றிக்கணக்கு பற்றி தி.மு.க மேலிடத்தில் பேசப்பட்டாலும் அங்கே இன்னொரு விஷயம்தான் இப்ப சீரியஸா இருக்குது.''
""2ஜி விவகாரம்தானே? நம்ம நக்கீரனில்தான், எம்.பி. தேர்தல் முடிந்துதான் இந்த வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவாகும்னும், தீர்ப்பு வரும்போது புதிய அரசு மத்தியில் அமைந்திருக்கும்னு முன்கூட்டியே டீடெய்லா எழுதியிருந்தாங்களே!''
""டெல்லி சி.பி.ஐ கோர்ட்டில் ஆ.ராசாகிட்டே மே 5-ந் தேதி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அடுத்ததா கனிமொழி, கலைஞர் டி.வி.சரத் உள்ளிட்டவங்ககிட்டே வரிசையா பதிவாகும். அதே நேரத்தில், 2ஜி தொடர்பா அமலாக்கப்பிரிவின் விசா ரணையில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோரோடு தயாளு அம்மாளையும் குற்றவாளியா சேர்த்திருப் பதில் கலைஞர் ரொம்ப ஷாக். 2ஜி கேஸ் தொடர்பான சி.பி.ஐ.யோட வழக்கில் தயாளு அம்மாள் சாட்சியாத்தான் இருக்காரு. ஆனா, அதே விவகாரம் தொடர்பா அமலாக்கப்பிரிவு போட்டிருக்கும் வழக்கில் தயாளு அம்மாளும் ஒரு குற்றவாளியாக்கப் பட்டிருக்கிறார்.''
""இதன் பின்னணி தொடர்பா ப.சிதம்பரம் மேலே தி.மு.க தன்னோட கோபத்தை வெளிப் படுத்தியபோது, தனக்கு இதில் சம்பந்தமில்லைன்னும் அதிகாரிகள்தான் காரணம்னும் சொல்லியிருந்தாரே, இப்ப டெல்லி வட்டாரத்தில் என்ன சொல்றாங்க?''
""அமலாக்கப்பிரிவு அதிகாரிகள்கிட்ட பேசு னேங்க தலைவரே.. .. இது சம்பந்தமா ஃபைல் ரொம்ப நாளா பெண்டிங்கில் இருந்தது. இப்பதான், 10, ஜன்பத் ரோடு அட்ரஸிலிருந்து க்ளியராகி வந்தது. அதை யடுத்துதான், தயாளு அம்மாள் உள்பட எல்லோரும் குற்றவாளியா சேர்க்கப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நேரில் ஆஜராக கோர்ட்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில், சோனியாவை விட ராகுல்காந்திதான் அதிக இன்ட் ரஸ்ட் காட்டு றாருன்னு சொல்றாங்க. ராகுலோட இன்ட்ரஸ்ட் பற்றி தி.மு.க தலைமைக்கும் தெரிஞ்ச தால, கலைஞர் ரொம்ப அப்செட்.''
""அது சம்பந்தமாவும் டெல்லியில் விசாரிச் சேங்க தலைவரே.. தேர்தலுக்காக சொல்லப்பட்டது தான் இதுன்னு காங்கிரஸ் தரப்பில் சொல்றாங்க. ஏன்னா, தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும்னு சோனியா உள்ளிட்டவங்க தீவிரமா ஆலோசிச் சிருக்காங்க. காங்கிரசுக்கு சாதகமா இருக்காதுங் கிறதால, மூன்றாவது அணி ஆதரவில் காங்கிரசோ, காங்கிரஸ் ஆதரவில் மூன்றாவது அணியோ ஆட்சி யமைத்து, மோடிக்கு பிரேக் போடுவது பற்றி டிஸ்கஸ் பண்ணியிருக்காங்க. நேரடி அரசியலுக்கு வரமாட்டேன்னு சொன்ன பிரியங்காவும், பா.ஜ.க ஆட்சியமைச்சிடக் கூடாதுங்கிறதில் உறுதியா இருக்காராம். ராகுலுக்குப் பதில் பிரியங்காவை முன்னிறுத்தியிருக்கலாம்னும், மக்களை ஈர்க்கும் சக்தி அவருக்கு இருக்குதுன்னும் 10, ஜன்பத் சாலை வீட்டில் நடந்த ஆலோசனையில் கலந்துக்கிட்ட கட்சியின் சீனியர்கள் சொல்லியிருக்காங்க.''
""பா.ஜ.க கூட்டணியில் ஏதாவது ஆலோ சனைகள் நடக்குதா?''
""நான் ஒரு தகவல் சொல்றேன்.. தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறதுக்கு முன்னாடியே, பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவாளி ஜாகீர் உசேன் இலங்கையிலிருந்து தமிழகத்துக்குள் புகுந்திருப்பதையும், வெடிகுண்டு விபரீதங்கள் ஏற்படலாம்னும் மாநில அரசுக்கு மத்திய உளவுத்துறை தகவல் கொடுத்திடிச் சாம். இந்தத் தகவலை தமிழக உளவு அதிகாரிகள், ஜெ.கிட்ட எடுத்துச் சொன்னப்ப, இப்ப கைது, விசா ரணைன்னு போனா தேர்தலுக்கு சரியா இருக்காதுன்னு சொன்னதால இப்ப கைது செய்துள்ளார்கள்.''