‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில், ‘‘ஒரு தெய்வம் தந்த பூவே’’ பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமான சின்மயி, தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார்.
பாடகியாக மட்டுமல்லாமல் த்ரிஷா, சமந்தா, காஜல் அகர்வால் உள்பட பல முன்னணி கதாநாயகிகளுக்கு சின்மயி டப்பிங் கொடுத்து இருக்கிறார்.
சின்மயிக்கும், நடிகர் ராகுல் ரவீந்திரனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, இவர்கள் திருமணம் சென்னை சவேரா ஓட்டலில் நேற்று நடந்தது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டார்கள்.ராகுல் ரவீந்திரன் 'மாஸ்கோவின் காவிரி ' உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
திருமணத்தில் கலந்து கொண்டவர்களிடம், மணமக்கள் பரிசு பொருள் எதுவும் வாங்கவில்லை. அதற்கு பதில், லடாக்கில் உள்ள மலை சாதியினரின் பள்ளிக்கு கட்டிடம் கட்ட உதவும்படி கேட்டுக்கொண்டார்கள்.
மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி, இன்று மாலை 6.30 மணிக்கு சவேரா ஓட்டலில் நடக்கிறது. அதில், திரையுலகை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.