போர்த்துகல் தூண் சாய்ந்து விட்டதா? ரொனால்டோ விலகல்

உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கு முன்னதாகவே ரொனால்டோ முழங்கால் வலியுடன் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.
உலகக்கிண்ணத்திற்கு முன்பாகவே முழங்கால் வலியுடன் ரொனால்டோ விளையாடக் கூடாது. அப்படி விளையாடினால் அவரது எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும் என்று அவரது டாக்டர் எச்சரித்திருந்ததாக கூறப்படுகிறது.
போர்த்துகல் முதல் போட்டியான ஜெர்மனியுடனான போட்டியின் போது முழு ஆட்டத்திலும் அவர் ஆடினார். அப்போட்டியில் போர்த்துகல் அணி 0-4 என்ற கோல் கணக்கில் படு தோல்வியைச் சந்தித்தது.
இந்நிலையில் அடுத்த போட்டிக்காக பயிற்சியின் போது பாதியிலேயே ரொனால்டோ வெளியேறி விட்டார். அவரது இடது முழங்காலில் ஐஸ் பேக் வைக்கப்பட்டிருந்தது.
இப்படி பயிற்சியிலிருந்து பாதியில் ரொனால்டோ விலகியதால் அவர் தொடர்ந்து ஆட மாட்டார் என்று செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் இது குறித்து போர்த்துகல் அணி நிர்வாகம் எதையும் உறுதிப்படுத்தவில்லை.
போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.