மன்னாரில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

அளுத்கம, பேருவளைப் பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் இன்று வியாழக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதால் இன்று வியாழக்கிழமை நடைபெற வேண்டிய வழக்குகள் அனைத்தும் பிற்போடப்பட்டுள்ளன. அளுத்கம தர்கா நகர், பேருவளை ஆகிய பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக இன்று வியாழக்கிழமை மன்னார் சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இந்தப் பணிப் பகிஸ்கரிப்பு இன்று காலை மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன் நடைபெற்றது மன்னார் நீதிமன்றத்திற்கு வழக்குகளுக்காக வருகை தந்தவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.