ரெக்சியன் கொலை ; கமல் உள்ளிட்ட மூவருக்கும் மறியல் நீடிப்பு

கொலை தொடர்பிலான வழக்கு நீதவான் நீதிமன்ற நீதிபதி லெனின்குமார் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குறித்த மூவரையும் யூலை மாதம் 8ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியல் காலத்தை நீடிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி நெடுந்தீவுப் பிரதேச சபைத் தலைவராக இருந்த ரெக்சியன் புங்குடுதீவில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து சூட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
இக் கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார், சந்தேகத்தின் பேரில் முன்னாள் ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும், வடமாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவராகவும் இருந்த கந்தசாமி கமலேந்திரன் , றெக்சியன் மனைவி அனிதா மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகிய மூவரையும் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது
நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.