சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணங்களை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் கமிஷனை அமைத்திருக்கிறார் முதல்வர். சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த ஒரு குழுவில் உறுப்பினராக உள்ள ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயத்தை சந்தித்தோம்...
அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழ என்ன காரணம்?
அடிப்படைக் காரணமே சி.எம்.டி.ஏ.தான். இங்கு, ஒரு பில்டிங்கை கட்டுவதற்கு அனுமதி கேட்க விண்ணப்பிக்கும்போதே பேரங்கள் துவங்கிவிடு கின்றன. அப்போது தொடங்கும் பேரம், கட்டிடம் முடிந்து கம்ப்ளீசன் சர்டிஃபிகேட் தரும்வரை தொடர்கின்றது. சாதாரண பொதுஜனம், சொந்த மாக ஒரு வீடு கட்ட சி.எம்.டி.ஏ.விலோ முனிசி பாலிட்டியிலோ அவ்வளவு ஈஸியாக அப்ரூவல் பெற்றுவிட முடியாது. ஆனால், அடுக்குமாடி வீடு கட்டுபவர்கள் ஈஸியாக அப்ரூவல் வாங்கிவிடு கிறார்கள். சில பில்டர்ஸ்களோ, சி.எம்.டி.ஏ.வில் அப்ரூவலுக்காக அப்ளை செய்த மறுநாளே கட்டிடத்தை கட்டத் துவங்கிவிடுகிறார்கள். ஏன்னா... மாற்று வழியில் தானே அப்ரூவல் வாங்கப்போகிறோம். அதனால் கட்டி டம் கட்டி முடிப்பதற்குள் அப்ரூவல் வந்துவிடும்ங்கிற நம்பிக்கை. இதன் பின்னணியில் இருப்பது பணம்தான். எந்த ஒரு ஃபைலும் பணம் இல்லாமல் ஒரு இன்ஞ்கூட நகர்வதில்லை. இன்னும் சொல்லப்போனால், ஆட்சி அதிகாரத் தில் இருப்பவர்களின் பினாமிகளாகத் தான் பில்டர்ஸ்களும் இருக்கிறார்கள். இடிந்து விழுந்த பில்டிங்கூட அர சியல்வாதிகளின் பினாமி சொத்தாக இருக்கலாம்னு எனக்கு சந்தேகம். ஏன்னா, இந்த பில்டிங்கிற்காக நிறைய விதிகள் தளர்த்தப்பட்டிருப்பது எதற்காக?
ஓட்டுக்குப் பணம் வாங்கும் மக்கள் முட்டாள் களாகவும் ஏமாளிகளாகவும் இருக்கும்வரை அரசியல் வாதிகள் பணம் சம்பாதிக்க இருக்கிற வழிகளையெல்லாம் பயன்படுத்தத்தான் செய்வார்கள். குளம், குட்டை எல்லாவற்றிலும் வீடு கட்ட மனம்போன போக்கில் அப்ரூவலும் தருவார்கள். மனித உயிர்களைப் பற்றி இவர்களுக்கு என்ன கவலை இருக்கிறது. அதனால், இடிந்து விழுந்த கட்டிடத்தில் சி.எம்.டி.ஏ.வின் பங்களிப்புதான் அதிகம்.
பிளானிங் அப்ரூவல் படி கட்டாமல் விதிகளை மீறி கட்டப்பட்டதுதான் கட்டிடம் இழுந்து விழுந்த தற்கு காரணம் என முதல்வர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
பில்டிங் இடிந்து விழுந்ததற்கு சி.எம்.டி.ஏ.வின் முறையான ஆய்வு இல்லை என்பதும் ஊழல்களின் மொத்த உருவமாக சி.எம்.டி.ஏ. மாறிக்கிடப்பதும்தான் அடிப்படைக் காரணம். ஆனால், அந்தத் துறை அதிகாரி களை பாதுகாப்பதற்காக முதல்வர் முயற்சிக்கிறார் என்பதுதான் அவர் சொல்லியிருக்கும் பதிலிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. பிளானிங் அப்ரூவலுக்கு மாறாக ஒருவன் பல அடுக்கு மாடி கட்டிவருகிறான் என்றால், அதைத் தடுக்கவேண்டிய பொறுப்பு யாருக்கு இருக்கு? சி.எம்.டி.ஏ.விற்குத்தானே? அப்ரூவலுக்கு எதிராக கட்டிடம் கட்டப்படுகிறதென்றால் தடுக்க வேண்டி யதுதானே? அதிகாரிகள் ஏன் தடுக்கவில்லை? அவர்கள் தடுத்திருந்தால் ஜீரணிக்க முடியாத இந்த துயரத்தையும் தடுத்திருக்க முடியும்தானே? தங்களது கடமையை செய்தார்களா, அதிகாரிகள்? செய்யவில்லையே. பொதுவாகவே ஆட்சியிலிருப்பவர்கள், தவறு செய்துள்ள அதிகாரிகளை தண்டிக்க நினைப்பதில்லை. அவர்களை காப்பாற்றவே நினைக்கிறார்கள். அதற்கு இந்த அரசும் விதிவிலக்கல்ல. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் பதிலாக அதிகாரிகளை பாதுகாக்க நினைப்பது துரதிர்ஷ்டம் தான். காரணம், சி.எம்.டி.ஏ.வை பணம் காய்க்கும் மரமாகவே உருவாக்கி வைத்திருக்கிறார்கள் அரசியல்வாதிகள். நிர்வாகத்தை நேர்மை யாகவும், நியாயமாகவும் சட்டத்தின்படியும் நடத்த வேண்டிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆட்சியாளர்களின் விருப்பு வெறுப்புகளுக் கேற்ப ஆட்டம் போடுவதால்தான் நிறைய தவறுகள் நடக்கிறது. தமிழகத்தின் ஐ.ஏ.எஸ். களை நினைத்தால் ரொம்பவே கேவலமாக இருக்கிறது.
கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணங்களை அறிய நீதிபதி ரகுபதி தலை மையில் விசாரணைக் குழு அமைத்துள்ளார் முதல்வர். தவறுகள் நடக்காமல் இருக்க என்ன வழிமுறைகள் இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள்?
நமது சட்டங்களும், விதிமுறைகளும் மிகக்கடுமையாகவே இருக்கின்றன. இதனை நேர்மையாகவும், மனசாட்சிப்படியும் அரசும் அதிகாரிகளும் நடைமுறைப்படுத்தினாலே எல்லாம் சரியாகும். அடுத்து ஊழல், லஞ்சம் இரண்டும் இல்லாத சி.எம்.டி.ஏ. நிர்வாகத்தை கட்டியமைக்க வேண்டும். தவறு செய்கின்ற அதிகாரிகள் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் அவர்களைத் தண்டிக்கிற தைரி யம் அரசுக்கு இருக்க வேண்டும். அதே சமயம், தவறுகளைச் செய்ய அதிகாரிகளைத் தூண்டு கிற அரசியல்வாதிகளும் திருந்த வேண்டும்.