தேர்தல் படு தோல்விக்குப் பிறகு கட்சித் தொண்டர்களை நேரில் சந்திக்க "உங்களுடன் நான்'’என்ற பெயரில் ஊர் தோறும் சந்திப்பு நிகழ்ச்சிகளை ஜூன் 26-ந் தேதி தொடங்கி ஜூலை 6-ந் தேதி வரை நடத்தினார் விஜய காந்த்
.
கோவை நிகழ்ச்சிக்கு, முதல் நாளான 25-ந் தேதியே விஜயகாந்த் வந்து விட்டார். அங்குள்ள ராவுத்தூர் தோட்ட பங்களாவிலே யே ஹால்ட் அடித்தார். சென் னையில் இருந்து தலைமைக் கழகச் செயலாளர் பார்த்தசாரதியையும், உதவியாளர் பார்த்தசாரதியையும் மட்டும் தன்னோடு அழைத்துக்கொண்டார். உதவியாளர் பார்த்த சாரதியை அழைத்து, அன்றைய நாளிதழ்களின் முக்கிய செய்திகளைப் படிக்கச் சொல்லிக் கேட்டுவிட்டு, டி.வி. பார்த்துவிட்டு கூட்டத்திற்கு கிளம்பத் தொடங்கினார்.
காலை 8 மணியிலிருந்தே 1500 பேர்வரை தே.மு.தி.க. தொண்டர்கள் திரண்டிருந்தனர். 9 மணி அளவில் சந்திப்பு நடந் தது. ""தோல்வியைப் பத்தி கவலைப்படாதீங்க. 2016 தேர்தல்ல, நமக்கு மக்கள் மத்தியில் கௌரவமான ஆதரவு கிடைக்கும். சட்டமன்றத்தில் என்னைப் பேச விடமாட்டேங்கறாங்க. கேட்டா கையை ஓங்கினேன், நாக்கைத் துருத்தினேன்னு சொல்றாங்க. பத்திரிகைகள்லயும் என்னை தப்புத் தப்பா எழுதறாங்க. நான் அப்படிப்பட்டவன் அல்ல. உங்களை எல்லாம் தனியா சந்தித்துப் பேசணும்னுதான் இப்படி ஒரு கூட்டத்தைக் கூட்டினேன். உங்களோட நான் படம் எடுத்டுக்கிட்டா உங்களுக்கும் சந்தோசம். எனக்கும் சந்தோசம். நீங்கள்லாம் உங்க குடும்பத்தோட வருவீங்கன்னு எதிர்பார்த்தேன், தனியா வந்திருக்கீங்க. இனி மனைவி மக்களையும் கூட்டிட்டு வாங்க. அவங்களையும் நம்ம கட்சியில் உறுப்பினராக்குங்க''’’ என்றவர்...
மறுநாளான 27-ந் தேதி அதே இடத்தில், திருப்பூர், நீலகிரி மாவட்ட தொண்டர்களைச் சந்தித்தார். வெறும் 800 பேர்வரைதான் திரண்டிருந்தனர். இந்த ஆட்சி இன்னும் 2 வருசம்தான் இருக்கப்போவுது. அதாவது 700 நாள். அதுக்குள்ள நாம அதுக்கு எதிரா போராட்டங்களை நடத்தணும்''’என்று தொண்டர்களை உசுப்பினார்.
28-ந் தேதி கரூருக்கு விஜயகாந்த், போனபோது 2 ஆயிரம் பேர் வரை திரண்டிருந்தனர். மாவட்ட செயலாளர் கிருஷ்ணனைப் பார்த்து ""இங்க ஓட்டு ரொம்ப குறைவா வாங்கியிருக்கீங்க. ஏன்?''’என்றார். ""கூட்டணிக் கட்சிகள் நமக்கு வேலை செய்யலைங்க''’என்றார் கிருஷ் ணன்.’’காரணத்தை ஏற்காமல், ""இனி மக்களை அணுகுங்க''’என்றார்.
29-ந் தேதி நாமக்கல்லுக்கு விஜயகாந்த் வந்தபோது, 2 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிந்திருந்தனர். போட்டோ எடுக்க தள்ளுமுள்ளு நடந்தது. போட்டோ கிராபரோ, கேமராவை ரெடி பண்ணிக்கொண்டிருந்தார். ""ஏம்ப்பா சினிமாவா எடுக்கறோம். சீக்கிரம் எடு''’என ஜாலியாய் கமெண்ட் அடித்த விஜயகாந்த், எல்லோருடனும் போட்டோ எடுத்துக்கொண்டார். ஓட்டு குறைந்ததில் பா.ம.க.வின் கைங்கர்யம் பற்றிப் பேசினார்.
30-ந் தேதி சேலத்தில் 6,500 பேர்வரை திரள, விஜய காந்த்திடம் உற்சாகமான உற்சாகம். கூட்டம் நடந்த கே.எம்.பி. கல்யாண மண்டபத்திற்குள் 1000 பேர் வீதம் டீம் டீமாய் அனுப்பிவைத்தனர். எல்லோருடனும் போட்டோ எடுத்துக் கொண்டார். தொண்டர்களிடம் பேசிய விஜயகாந்த் ""‘எனக்குக் கண் தெரியலை, கிட்னி பெயி லியர்னு என்னென்னவோ எழுதறாங்க. இந்த விஜய காந்த்தை எது வும் ஒண்ணும் செய்யாது என்றவர், திடீரென சோகமாகி ""உங்களை நம்பித்தான் சுதீஷை இங்க நிக்க வச்சேன். அவர் ஜெயிச்சி, மந்திரியாக ஆயிருந்தா நமக்கு எவ்வளவு பெரிய கௌரவமா இருந்திருக்கும். நாம இன்னும் கடுமையா உழைக்கணும்''’ என்றார் சுரத்தில்லாமல்.
2-ந் தேதி கிருஷ்ணகிரி ஆர்.கே. ஓட்டலில் நடந்த கூட் டத்துக்கு விஜயகாந்த் வந்த போது, மா.செ.சந்திரனும், மாவட்ட பொருளாளர் அன்பர சும் அவரைக் கைத்தாங்கலாய் அழைத்து வந்தனர். 150 பேர் வீதம் 7 பேட்சை அவர் சந்தித் தார். போட்டோ மட்டும்தான், பேசவில்லை.
3-ந் தேதி, வேலூர் மாவட்ட தொண்டர்களின் சந்திப்பு, கனியம்பாடி பிரார்த்தனா ஜெயராம் திருமண மண்டபத் தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந் தது. முதல்நாள் மாலையே வேலூர் வந்த விஜயகாந்த், அங்கு ஜி.ஆர்.டி. ஓட்டலில் ஹால்ட் அடித்துவிட்டார். வேலூர் மாவட்டத் தொண்டர் களிடம், முன்னதாகவே அவர் களின் உறுப்பினர் கார்டை வாங்கி அதன் ஜெராக்ஸை சென்னை அலுவலகத்துக்கு அனுப்பி, அது ஒரிஜினல் தானா என்று சரிபார்த்து, அதன்பின் சந்திப்புப் பட்டி யலுக்கு அவர்களைக் கொண்டு வந்தனர் நிர்வாகிகள்.
மண்டபத்திற்கு வெளியே 5 ஆயிரம் பேருக்கும் மேல் திரண்டிருந்தனர். அவர்களை 350 பேர்கள் கொண்ட டீம்களாகப் பிரித்துப் பிரித்து மண்டபத்திற்குள் அனுப்பினர். இங்கும் போட்டோ படலம் மட்டும்தான்.
4-ந் தேதி, திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்துக் கான கூட்டம், போளூர் ராஜப்ரியா மண்டபத்தில் நடந்தது. உற்சாக மூடில் இருந்தார் விஜயகாந்த். அவர் பேசும்போது ""எனக்கு உடம்பு சரியில்லை, ஆபரேசன் நடக்கப்போவுது... நான் டிரீட்மெண்ட் எடுக்கிறேன்னு பத்திரிகைகள்ல பொய்யா எழுதறாங்க. அதே சமயம் ஆளும்கட்சிக்கு சாதகமா செய்தி போடறாங்க. அதனால் பத்திரிகையையே கையால் தொடாதீங்க. டி.வி.யும் பார்க்காதீங்க'' என்றார் ஒரே மாதிரியாய்.
விஜயகாந்த்தை சந்தித்துவிட்டு வெளியே வந்த களம்பூர் வான்மதி, ராமகிருஷ்ணன், சீழ்பட்டு சரளா, கலைச்செல்வி, சத்யா போன்றோர் ""படத்தில் நாங்க பார்த்து பிரமிச்ச கேப்டனை இப்பதான் பக்கத்தில் பார்த்தோம். சிலை மாதிரி அம்சமா நின்னார். யாரும் காலில் விழக்கூடாது. சால்வை போத்தக் கூடாதுன்னு முன்னாடியே சொல்லிட்டாங்க. பேர் என்ன? எந்த ஊர்னு கேட்டார். அதுவே இந்த ஜென்மத்துக்குப் போதுங்க. அவர் ஆட்சிக்கு வந்தா, ரமணாவாதான் அதி ரடியா செயல்படுவார்'' என்றார்கள் உற்சாகமாய்.
ஜூலை 6-ந் தேதி சென்னை மாவட்டத் தொண்டர் களை கட்சித் தலைமையகத் தில் சந்தித்தார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில்... தலைமையகத்தின் முகப்பில் இருந்த கட்சிக் கொடிக் கம்பம் மழையிலும் காற்றிலும் சரிந்து விழுந்துவிட்டது. தகவலைக் கேட்டுப் பதறிப்போன பிரேமலதா, வடபழனி கோயில் குருக்கள்களை வரவழைத்து சிறப்பு பூஜை யையும் பரி கார யாகத் தையும் நடத்தி னார்.
6-ந் தேதி கட்சி அலு வலகம் வந்த விஜயகாந்த், புதிதாக நடப்பட்ட கம்பத்தில் புதிய கொடியை ஏற்றினார். வரும் வழியில் கட்சிப் பிரமுகர்கள் தங் கள் கார்களை, டிராபிக்ஜாம் ஆகும் படி அங்கங்கே சாலைப்பகுதியில் நிறுத்தியிருந்ததைக் கவனித்தவர், அப்புறப்படுத்தச் சொன்னார்.
இந்த சந்திப்பில் விஜயகாந்த் திடமிருந்து அனல் பறந்தது.
""2016 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க ஜெ. இருக்கமாட்டார். ஜெ. ஜெயிலுக்குப் போய்விடுவார். தி.மு.க., அழகிரி-ஸ்டாலின் சண்டையில் காணாமல் போய்விடும். நம்ம கட்சி தான் அப்போ நிமிர்ந்து நிற்கும்'' என்று சீறியவர்...
""நம்ம கட்சியில் இருந்து போனவங்களை இனி அங்க சீந்தக்கூட மாட்டாங்க. நீங்க இங்கேயே இருந்தா உங்க ளுக்கு எதிர்காலம் உண்டு. உங் கள் உழைப்புக்கு இங்கே உரிய பலன் கிடைக்கும்'' என தொண்டர்களுக்கு ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி னார்.
விஜயகாந்த்தின் டூர் சில நேரம் உற்சாகமாகவும், சில நேரம் பரபரப்பாகவும், சில நேரம் சுரத்தில்லாமலும் என ஒரு வித கலவையாய் இருந்தது. அவர் ஒரே மன நிலையில் இல்லை என்ப தையே இது காட்டுகிறது.
-ஜீவா, ராஜா, அருள்குமார்,
வடிவேல் & பிரகாஷ்