1986 ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடந்த கொலை தொடர்பாக, டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஆனால், பின்னர் நடந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் டக்ளசுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
எனினும், தான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், டக்ளஸ் தேவானந்தா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், தற்போது இலங்கை அமைச்சராக இருக்கும் தன்னிடம் வீடியோ ஃகான்பரசிங் மூலம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முடிவடைந்தது. இதையடுத்து, வரும் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி செல்வம் தெரிவித்தார்.