இதில் பங்கேற்கும் வீரர்கள் லண்டனில் புகழ்பெற்ற லாங்காம் என்ற நட்சத்திர ஹொட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இரவு நேரங்களின் போது ஹொட்டலில் அமானுஷ்ய விடயங்கள் நடப்பதாக கூறி வீரர்கள் தங்களது அறையை மாற்றித்தருமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளது இங்கிலாந்தின் துடுப்பாட்ட வாரியத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் கூறியதாவது இலங்கைக்கு எதிரான போட்டியின் போது நான் இங்கு அறை எடுத்து தங்கியிருந்தேன்.
அப்போது ஒரு நாள் அறையில் வெப்பம் அதிகமாக இருந்ததால் என்னால் தூங்க முடியவில்லை. மேலும் திடீரென்று குளியலறையில் உள்ள குழாய்கள் அனைத்தும் திறந்து கொண்டு தண்ணீர் கொட்டத் தொடங்கியதால் என்னவென்று பார்க்க நான் அங்கு சென்று விளக்குகளை போட்டேன்.
இதன்பின் விளக்கு எரியத் தொடங்கியதும் குழாய்களில் தண்ணீர் வெளியேறுவது நின்றுவிட்டது.நான் மீண்டும் விளக்குகளை அணைத்தபோது தண்ணீர் வேகமாக குழாய்களிலிருந்து வரத் தொடங்கியுள்ளது.
இதனால் பதறியடித்து ஓடிய ஹொட்டல் அறையை மாற்றுமாறு அங்கிருந்த ஊழியர்களிடம் கூறினேன் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கடந்த மாதம் இதேபோல் ஹொட்டல் அறையில் பேய் நடமாட்டம் இருந்ததை தான் உணர்ந்தார் என்றும் இச்சம்பவத்தினால் அவர் மனைவி அவருடன் தங்க மறுத்துள்ளார் எனவும் பிராட் கூறியுள்ளா