போரில் பின்பற்றிய நிலை இப்போது தேவையில்லை ; கூறுகிறார் முதலமைச்சர் சி.வி

இன்று காலை 9 மணிக்கு ரில்கோ விடுதியில் இடம்பெற்ற உள்ளுராட்சி தொடர்பான தேசிய கொள்கை பற்றிய விழிப்பூட்டல் கருத்தரங்கில் உரையாற்றும்போது இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர்,
இங்குள்ள பிரதேசசபைத் தவிசாளர்கள் அடிமட்ட ஜனநாயக பாரம்பரியத்தின் மூலம் தேர்தல் செயற்பாட்டின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நீங்கள் உங்கள் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தி இங்கு வந்துள்ளீர்கள். நீங்கள் உங்கள் மக்களின் உணர்வுகளை, அபிலாஷைகளை, ஆதங்கங்கங்ளை, எதிர்பார்ப்புக்களை நன்குணர்ந்தவர்களாக இருப்பீர்கள் என்பது எமது நம்பிக்கை. எனவே அவர்களது தேவைகளை நிறைவேற்றவும் சிறந்த சேவைகளை அவர்களுக்கு வழங்கவும் நீங்கள் கடப்பாடு உடையவர்களாக இருக்கின்றீர்கள்.
எனவே சமூக நீதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு தவிசாளருக்கும், சபை அங்கத்தவருக்கும் இருக்கின்றது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் அது என்ன சமூக நீதி என்று நீங்கள் கேட்கக் கூடும்.
சகல மக்களையும் சமமாகவும் சமானமாகவும் பேணிவருதல் உங்களைச் சார்ந்த ஒரு கடப்பாடு. இன்று சாதி அடிப்படையிலும் பிராந்திய அடிப்படையிலும் சமூக நீதிக்கு ஒவ்வாத பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். பொது நிகழ்ச்சித் திட்டங்களில் சமூகப் புறந்தள்ளல் நிகழுவதை நான் அவதானித்துள்ளேன். சமூக நீதி என்றால் சமூகப் புறந்தள்ளல் நிகழாமையை உறுதிப் படுத்துவதாகும். உண்மையில் சமூக நீதி எனும் போது இன்னுமொரு முக்கிய முகமும் அதற்கு இருக்கின்றது. அதாவது சமூக உள்வாங்கலைக் கடைப்பிடிப்பதே அது. சமூகத்தினுள் ஒவ்வொரு பிரஜையையும் உள்வாங்கி அவர்களது பங்களிப்பு ஒவ்வோர் செயற்பாட்டிலும் பெறப்படுதலை உறுதி செய்வது சமூக நீதியைக் கடைப்பிடித்தலாகும்.
சட்டமானது வேற்றுமை கொண்ட மக்களிடையே உரித்துக்களைக் கையாளும் விதத்தில் ஒரு சம நிலையைக் கொண்டுவந்துள்ளது. அதாவது சட்டத்தின் முன் யாவரும் சமமே என்று கூறுகின்றோம். அதனால் யாவரும் சமம் என்று ஆகிவிடாது. ஆனால் யாவருக்கும் சட்டம் சம உரித்தை வழங்குகின்றது. சட்டத்தின் முன்னால் யாவரும் சம உரித்துக்களைக் கொண்டுளார்கள் என்பதுதான் யதார்த்த நிலை.
எமது சமூகத்தில் இருக்கக் கூடிய பாதிக்கப்பட்ட பெண்கள், பலன் குறைந்து போன முதியோர்கள், மாற்றுவலுவுடையோர் போன்றோர் அபிவிருத்தி முயற்சிகளில் ஈடுபடுவதற்கு ஏதுவாக வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஓர் கருவியாக இந்த செயற்பாட்டை மாற்றுங்கள்.
எம்முள் வலுக்குறைந்தவர்களை வலுப்பெற உதவுவதில்த்தான் எமது கலாச்சாரப் பண்புகள் உறைந்து கிடக்கின்றது. சட்டவாட்சியை இறுகப் பற்றுங்கள். குற்றமற்ற மேம்பட்ட சமூகமொன்றைத் தோற்றுவிப்பதற்கு இதை விடச் சிறந்த வரைமுறை இருக்கமுடியாது. மனித விழுமியங்களை மதிப்பதற்குரிய சேவைகளை நாளும் வழங்கத் தலைப்படுவோம். பிறப்பிலிருந்து இறப்பு வரை மனிதன் நுகரும் சகல தேவைகளையும் வழங்கும் உள்ளுராட்சியின் நற்பண்புகளை நாற்திசையும்
அறியும் வண்ணம் உங்கள் செயற்பாடுகள் அமையப் பெற வேண்டும்.
அபிவிருத்திக்குச் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபா பணமும் மக்கள் செலுத்திய வரி அல்லது மக்கள் திருப்பிக் கட்ட வேண்டிய கடன் என்பதை மனதில் நிறுத்துவதுடன் ஒவ்வொரு ரூபாவும் வழங்கக் கூடிய அதி உச்சப் பயனை மக்கள் பெறும் வண்ணம் ஊழலற்றதான நல்லாட்சியை வழங்கப் பாடுபடுங்கள்.
சட்டவாட்சிக்குக் கட்டுப்பட எவரும் முன்வரவேண்டும். பல்வேறுபட்ட மனக்காயங்களுக்குள்ளான எமது மக்கள் சுயமாக வளம் பெறவும் மனித உரிமையைப் பேணவும் உயரிய ஆற்றல்களை பெற வழிகாட்ட வேண்டியது உங்களது பொறுப்பென்றால் மிகையாகாது. நாங்கள் ஒரு புதிய பயணத்தில் உள்நுழைந்துள்ளோம்.
வன்முறைக்கு வந்தனம் செலுத்திவிட்டு வருங்காலத்தை நோக்கி வளமான மனித மேம்பாட்டுக் கொள்கைகளை முன்வைத்து முன்னேறுவோமாக என்றார்.
போரினால் நாம் பாதிக்கப்பட்ட காலத்தில் ஒரு வித்தியாசமான கலாசாரம் எம்மைப் பீடித்திருந்தது. அந்த காலகட்டத்தில் எம்மைக் கட்டாயப்படுத்திய அவ்வந்த நலவுரித்தலகுகளுக்கு ஏற்றவாறு சட்டத்தை மறந்து சக நல்லாட்சி விழுமியங்களை மறந்து கடமையாற்ற வேண்டிய அந்தக் கலாசாரம் போரின் பின்னரும் தொடர வேண்டிய அவசியமில்லை என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.