புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2014

சுப்பிரமணியன் சுவாமிக்கு நீதிமன்றம் அழைப்பாணை 
இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன்
சுவாமிக்கு தமிழ்நாடு நீதிமன்றம் இன்று புதன்கிழமை அழைப்பாணை விடுத்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் 10ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு சுவாமிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

மீனவர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல், கடிதம் மட்டும் எழுதுவதாக தமிழக முதலமைச்சரை விமர்சித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சுப்பிரமணியன் சுவாமி பேட்டி அளித்திருந்தார்.

அதில் தமிழக மீனவர்களின் படகுகள் ஜெயலலிதாவுடன் இருக்கும் சசிகலா நடராஜன் மற்றும் திமுக தலைவர் ரி.ஆர். பாலு ஆகியோருக்குச் சொந்தமானதென சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad