அ தி முக நடிகர் அணி பிரசாரத்துக்குத் தயார்
வெயில் காலத்தில் அக்னி நட்சத்திரங்கள் தோன்றுவது இயல்பு. சூடான காலத்தில் சுவையைக் கூட்டுபவர்கள் இந்த நடிகர்கள்தான். நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஜெயலலிதா பிரசாரத்துக்குக்

கிளம்பியதைத் தொடர்ந்து, முதல்கட்டமாக அ.தி.மு.க-வில் அங்கம் வகிக்கும் நடிகர்கள், நடிகைகள் பிரசாரத்துக்குத் தயாராகிவிட்டனர்.
இவர்களிடம் என்ன பேசப்போகிறீர்கள் என்று கேட்டோம்:
செந்தில்: ''தி.மு.க-வில் காசு இருந்தால்தான் சீட் என்ற நிலை உள்ளது. மீதிக் கட்சிகள் குடும்பத்துக்காக செயல்படுகின்றன. காங்கிரஸ் அரசில் விலைவாசி உயர்ந்துகிட்டுப் போகுது. 2ஜி, காமன்வெல்த் என ஊழலும் அதிகமாகி இருக்குது. விஜயகாந்தைப் பத்தி மக்களுக்கு நல்லா தெரிஞ்சிருச்சு. அ.தி.மு.க. சப்போர்ட்லதான் சட்டசபைத் தேர்தல்ல ஜெயிச்சாங்க. இப்போ அந்தக் கட்சியில் எம்.எல்.ஏ. எண்ணிக்கைக் குறைஞ்சிட்டு இருக்கு. இந்தியா வல்லரசாக