புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2015

மகேஸ்வரி நிதியத்தினர் தொடர்ந்தும் அடாவடி; ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிப்பு


மணல் அகழ்வைத் தடுக்க முற்பட்டவரை மகேஸ்வரி நிதியத்தினர் தாக்கியதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 
மண் அகழ்வதற்கு பருத்தித்துறை பொலிஸார் இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்ட நிலையில் மகேஸ்வரி நிதியத்தினர் இன்று காலை நாகர்கோயில் பகுதிக்கு மணல் அகழ்விற்கு சென்றிருந்தனர்.
 
அவர்களை ஊர்மக்கள் தடுத்துள்ளனர். அதன்போது மகேஸ்வரி நிதியத்தின் தலைவர் ரஜீவ் தலைமையிலான குழுவினர் தடுத்தவர்களைத் தாக்கியுள்ளனர்.
 
நாகர் கோயில் கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் பரஞ்சோதி ஜீவராசா ( வயது 43) என்பவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். 
 
இதனையடுத்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சம்பவம் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
குறித்தவர் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். 

ad

ad