70 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் சிட்டினியில் நடைபெற்ற இப்போட்டியின் 44 ஆவது நிமிடத்தில் அவுஸ்திரேலியாவின் மெசிமோ லுவொங்கோ கோல் ஒன்றை போட அவுஸ்திரேலியா முன்னிலை பெற்றது. இதனால் அவுஸ்திரேலிய ரசிகர்களின் ஆரவாரம் மைதானத்தில் பொங்கியது.
அவுஸ்திரேலியா 46 நிமி டம் தென்கொரியாவை கோல் போடாமல் தடுத்தது. எனினும் போட்டி உபாதை நேரத்தை தொடுமளவ ில் இருக்கும் போது தென்கொரியாவின் சொன் ஹெங் மின் கோல் ஒன்றை போட போட்டி சமநிலையானது. இதனால் மைதானமே அமைதியானது.
இந்நிலையில் போட்டியின் மேலதிக நேரத்தில் 15ஆவது நிமிடத்தில் ஜேம்ஸ் ரொய்சி கோல் போட அவுஸ்திரேலியா வெற்றி வாகை சூடியது.
கட்டாரில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா ஜப்பானிடம் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கட்டாரில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா ஜப்பானிடம் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.