புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2015

1வது உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் அரையுறுதி ஆட்டங் கள்

11வது உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் அரையுறுதி ஆட்டங் கள் எதிர்வரும் 24ம் திகதி ஆக் லாந்திலும், 26ம் திகதி சிட்னியிலும்
நடைபெற ஏற்பாடுகள் செய்யப் படுள்ளன.
இம்முறை 14 நாடுகள் மோதிய இப்போட்டித் தொடரில் லீக்சுற்றுகள் முடிவடைந்தவுடன் முன்னயை, பல உலகக் கிண்ண சாதனைகளும் மேலும் சர்வதேச ஒருநாள் போட்டி சாதனைகளும் முறியடிக்கப்பட்டுள் ளன. இம்முறை எல்லா அணிகளும் ஓட்டக் குவிப்பில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்துள்ளனர்.
லீக் சுற்றில் இடம்பெற்ற 42 ஆட்டங்களிலும் 35 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இது உலகக் கிண்ணப் போட்டித் தொடரொன்றில் பெறப்பட்ட அதிகூடிய சதங்களாகும். இதில் இலங்கை அணி ஆகக் கூடுதலாக 8 சதங்களைப் பெற்றுள்ளது. இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் முதன் முதலாக பங்கேற்ற ஆப்கானிஸ்தான் அணியினரால் மட்டுமே ஒரு சதம் கூடப் பெற முடியாமல் போனது. இலங்கை நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார இவ்வுலகக் கிண்ணப் போட்டித் தொடரில் தொடர்ச்சியாக 4 சதங்களை அடித்து 40 வருட ஒருநாள் போட்டி வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.
மேலும் உலகக் கிண்ணப் போட்டித் தொடரொன்றில் முதன்முறையாக இரட்டைச் சதமும் இம்முறை பெறப்பட்டது. மேற்கிந்திய வீரர் கிறிஸ்கெயில் பெப்ரவரி 24ம் திகதி கென்பராவில் சிம்பாப்வேக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 215 ஓட்டங்களைப் பெற்றார்.
லீக் சுற்று ஆட்டங்களில் இம்முறை 1854 பவுண்டரிகளும், 385 சிக்ஸர்களும் விளாசப்பட்டுள்ளது. இதில் அதிகூடிய பவுண்டரிகளாக இலங்கை அணியினர் 172 பவுண்டரிகள் விளாசியுள்ளனர். மேற்கிந்தியத் தீவு அணியினர் 52 சிக்ஸல்களை விளாசி முதலிடத்தில் உள்ளனர்.
மேலும் இம்முறை லீக் சுற்று ஆட்டங்களில் 25 தடவைகள் 300க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்துள்ளனர். இதில் 3 தடவைகள் 400க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் கடந்துள்ளனர். அதிகூடிய ஓட்டமாக மார்ச் 4ம் திகதி பேர்த்தில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக அவுஸ்திரேலிய அணி பெற்ற 6 விக்கெட் இழப்புக்கு 417 ஓட்டங்கள் உலகக் கிண்ண வரலாற்றில் அணியொன்று பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகவும் பதிவானது. இவ்வுலகக்கிண்ணப் போட்டித்தொடரில் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக பெப்ரவரி 28ம் திகதி இந்திய அணிக்கு எதிராக ஐ.அ. இராச்சியம் பெற்ற 102 ஓட்டங்கள் பதிவாகியுள்ளது.
இம்முறை முதலாவது ஹெட்ரிக் சாதனையை பெப்ரவரி 14 திகதி நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் ஸ்டீவன் பின் நிகழ்த்தியுள்ளார்.
இம்முறை 43 தடவைகள் 100 ஓட்டங்களுக்கு மேல் இணைப்பாட்டமாக லீக் சுற்று ஆட்டங்களில் பெறப்பட்டுள்ளது. இதில் பெப்பரவரி 24ம் திகதி சிம்பாப்வே அணிக்கு எதிராக மேற்கிந்திய வீரர்களான மார்வன் சாமுவேல் - கிறிஸ் கேயில் ஜோடி சர்வதேச ஒருநாள் போட்டியொன்றில் எந்தவொரு விக்கட்டுக்குமான அதிகூடிய இணைப்பாட்டமாக 372 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்தனர்.
பேர்த்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 275 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இது உலகக் கிண்ண வரலாற்றில் அதிக ஓட்ட வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும். இதற்கு முன் 2011ம் ஆண்டு இந்திய அணி பெர்மூடா அணியை 257 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்ததே சாதனையாக இருந்தது.
நியூசிலாந்து அணித் தலைவர் பிரெண்டன் மெக்கலம் பெப்ரவரி 20 திகதி இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் 18 பந்துகளில் அரைச்சதம் பெற்றார். இது உலகக் கிண்ணப் போட்டியில் பெற்றப்பட்ட அதிவேக அரைச்சதமாகும்.
இலங்கை அணியின் விக்கெட் காப்பாளர் குமார் சங்கக்கார உலகக் கிண்ணப் போட்டிகளில் இதுவரை அதிகூடிய ஆட்டமிழப்புக்களைச் செய்து சாதனை படைத்துள்ளார். இவர் 37 போட் டிகளில் 54 ஆட்டமிழப்புகளைச் செய்து அவு ஸ்திரேலிய வீரர் அடம் கில்கிறிஸ்டின் (52) சாத னையை முறியடித்துள்ளார்.

ad

ad