சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் புதன்கிழமை திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய இளையராஜா, ஆடியோ உரிமையை யாருக்கு வழக்குவது என அறிவிக்கும்வரை அதனை பயன்படுத்த என்னிடம் உரிமை பெற வேண்டும். சில நிறுவனங்கள் என்னிடம் அனுமதி பெறாமல் பாடல்களை விற்பனை செய்து வந்தன. மூன்றாவது நிறுவனங்களுக்கு காப்புரிமை வழங்கியது. இதன் காரணமாகவே நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை வந்தது என்றார்.
தாணு பேசுகையில், இனி யாராக இருந்தாலும், தயாரிப்பாளர் சங்கத்தின் மூலமாக இவருடைய ஒப்புதலோடு உரிமை பெற்றவர்கள்தான் அதனை பயன்படுத்த முடியுமே தவிர, மீறி பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை கண்டிப்பாக எடுத்து கடுமையான தண்டனைக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றார்.