புதிய அமைச்சர்கள் பதவியேற் றமை தொடர்பாகக் கேட்டபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார். 11 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 5 இராஜாங்க அமைச்சர்களும், 10 பிரதியமைச் சர்களும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். தாம் தேசிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்குத் தீர்மானித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் உள்ளிட்ட ஏனையவர்கள் அரசாங்கத்துடன் இணைந்துகொள் ளாவிட்டாலும், எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியில் இருக்கும் அவர்கள் அரசாங்கம் விடும் பிழைகளைச் சுட்டிக் காட்டும் அதேநேரம், முக்கியமான திட்டங்களுக்கு அரசாங்கத்துக்கு ஆத ரவளித்துச் செயற்படுவார்கள் என் றும் அமைச்சர் பெளசி மேலும் கூறி னார்.