அறிவுசார் சமுகத்துக்கு WiFi இளைய தலைமுறைக்கு நவீன தொழில் நுட்பம்
கொழும்பு கோட்டையில் அங்குரார்ப்பணம் செய்து வைத்து பிரதமர் உரை
1000 மில்லியன் ரூபா செலவழித்து காங்கேசன்துறையில் ஆடம்பர அரச மாளிகை அமைக்கப்பட முடியுமாயின் எமது இளைஞர், யுவதிகளின் கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக ஏன் முதலீடுகளை செய்ய முடியாதென்று கேள்வி எழுப்பிய பிரதமர், இளைஞர்
களுக்காக சிறிய தொழில்நுட்ப மாளி கையொன்றை நிர்மாணிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலை மையிலான அரசாங்கத்தினால் முடிந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் இலவச WiFi திட்டம் உத்தியோகபூர்வமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, மீள்குடியேற்ற அமைச்சர்
டி.எம். சுவாமிநாதன், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பிரதியமைச் சர்களான
ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன, அஜித் பி பெரேரா ஆகியோருடன்
இக்டா நிறுவனத் தலைவர் திருமதி முபாரக், மாகாணசபை, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து உரையாற்றுகையில்,
100 நாள் வேலைத்திட்டத்தில் பொது மக்களுக்கு WiFi இலவசமாக வழங்கு வோம் என்று ஜனாதிபதி தேர்தலின் போது அறிவித்திருந்தோம். கொழும்பு கோட்டையில் இன்று ஆரம்பமாகும் WiFi வழங்கும் திட்டம் எதிர்காலத் தில் நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் பரவலாக்கப்படும்.
பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் இதன் மூலம் பயன்பெற வேண்டும். எமது இளைஞர், யுவதிகள் புதிய தொழில்நுட்பத்தை இலவசமாக பெற்றுக் கொண்டு கல்வி செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். புதிய விடயங்களை அறிந்து கொள்வதற்கும் கற்றல் செயற்பாடுகளுக்கு தேவையான தேடல் களை இலவசமாக WiFi மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
பணம் இல்லாத சந்தர்ப்பங்களில் எமது மாணவ, மாணவிகள் இலவசமாக இணையத் தேடல்களை மேற்கொள்ளும் வகையிலே WiFi வலயம் அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. கையடக்கத் தொலைபேசி, ஐபேட், மடி கணனி போன்றவற்றில் WiFi வலயத்தை பெற்றுக் கொள்ளலாம்.
புதிய நுட்பங்களை, புதிய தொலைத்தொடர்பு கருவிகளை இளைய தலைமுறையினர் பயன்படுத்தி அறிவு சார்ந்த எதிர்கால சமுதாயமமொன்றை கட்டியெழுப்பும் வகையிலேயே WiFi வலயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள். ஆகவே, அவர்களுக்கு தேவையான அறிவை பெற்றுக் கொடுக்க நாம் இந்த திட்டத்தை 1000 மில்லியன் ரூபா முதலீடு செய்து இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கியுள்ளோம். இலங்கையின் பிரசித்தி பெற்ற நகரங்களில் எமது இளைஞர், யுவதிகள் இலவசமாக வைபை திட்டத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
நாம் இளைஞர், யுவதிகளை மையமாக வைத்தே இந்த திட்டத்தை அறி முகப்படுத்தியுள்ளோம். தகவல் தொழில் நுட்பத்துறையில் புதிய நுட்பங்களை அறிந்து கொள்வதில் இளைஞர் யுவதிகள் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள். ஆகவே இந்த WiFi திட்டத்தை முழு மையாக அனுபவிக்க வேண்டும்.
கடந்த அரசாங்கத்தினால் 1000 மில்லி யன் ரூபா செலவழித்து ஆடம்பர மாளிகைகளை நிர்மாணித்துள்ளார்கள். அதுவும் பொதுமக்களின் காணிகளை பலவந்தமாக பறித்து இந்த மாளிகை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 அறைகள் கொண்ட இந்த மாளிகையில் ஆடம்பர அறைகள் 4 உட்பட பாரிய சமையலறையும், சாப் பாட்டு அறைகள் இரண்டும் காணப் படுகின்றன. அவ்வாறே ஓய்வறை, நீர்த்தடாகம் என்பனவும் நிர்மாணிக் கப்பட்டுள்ளன.
200 ஏக்கர் காணியில் நிர்மாணிக்கப் பட்டுள்ள இந்த ஆடம்பர மாளிகை சர்வதேச மாநாட்டு மண்டபம் என கூறுகின்றனர். அந்த இடத்தில் மாநாட்டு மண்டபங்கள் எதற்காக நிர்மாணிக்கப்பட வேண்டும். ஆகவே, பல மில்லியன் செலவழித்து செய்யப்படும் இவ்வாறான வீண் விரயங்களை தவிர்த்து எமது எதிர்கால இளைஞர், யுவதிகளின் கல்வி செயற்பாட்டுக் காக நாம் முதலீடுகளை செய்துள்ளோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.