இதுகுறித்து ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ''பா.ஜ.க.வின் மூத்த தலைவரான சதுர்வேதி (84) நீண்ட நாட்களாக உ
சதுர்வேதி ஒரு தீவிரமான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்தவர் ஆவார். பி.எஸ்.ஷேக்வாத் துணை ஜனாதிபதியாக இருக்கும் போது பொதுப்பணித்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். வசுந்தரா ராஜே காலத்தில், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவின் எம்.பி.யாக நியமிக்கபட்டார். லலித் கிஷோர் சதுர்வேதிக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். அவரது இறுது ஊர்வலம் நாளை நடைபெறும் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். தற்போது, மறைந்த சதுர்வேதிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது மறைவு குறித்து ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. தலைவர் அசோக் பார்னமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''கட்சிக்காக கடுமையாக உழைத்த திறமையான தலைவர் அவர். ஜெய்ப்பூர் பா.ஜ.க.வின் கோட்டையாக இருந்து வந்தது. பா.ஜ.க. ஒரு டைனாமிக் தலைவரை இழந்துவிட்டது. அவரது உயிரிழப்பு ஈடுசெய்ய முடியாததாகும்" என்று குறிப்பிட்டு உள்ளார்