ஈராக்கின் மிகப்பெரிய தொல்பொருள் பொக்கி'மாக கருதப்படும் நம்ரூத்தில் ஐ.எஸ். சேதங்களை ஏற்படுத்தியதாக கடந்த மார்ச்சில் வெளியான செய்தி இந்த வீடியோ மூலம்
உறுதியாகியுள்ளது.
புல்டோசர்கள் மற்றும் வெடி பொருட்களை பயன்படுத்தி பண்டைய நகரை அழிக்கும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
"போலியான சிலைகளுக்கு எதிரான யுத்தம்" என்று அறிவித்தே ஐ.எஸ். ஈராக்கில் இருக்கும் பண்டைய தலங்களை அழித்து வருகிறது. இதில் ஆசிரியான் சின்னங்களை ஐ.எஸ். கனரக இயந்திரங்களை கொண்டு அழிப்பதாக ஈராக் சுற்றுலா அமைச்சு கடந்த மார்ச்சில் குறிப்பிட்டிருந்தது.
கிறிஸ்துக்கு முன் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நம்ரூத் பண்டைய நகர் ஈராக்கின் இரண்டாவது மிகப்பெரிய நகரும் ஐ.எஸ். கோட்டையுமான மொசூலில் இருந்து தென்கிழக்காக சுமார் 30 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது.
நம்ரூத் நகரின் பெரும்பாலான பொக்கி'ங்கள் வெளிநாட்டு அருங்காட்சி யகங்களில் உள்ளன.
எனினும் அங்கு மனித தலை மற்றும் மிருகங்களின் உடல் கொண்ட இராட்சத 'லமஸ்ஸ{ ' சிலைகள் மற்றும் கற்கலான அலங்கார வளைவுகள் பாதுகாக்கப்பட்டு வந்தன.
ஈராக்கில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் 12,000 தொல்பொருள் இடங்களில் சுமார் 1,800 இடங்கள் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளிலேயே அமைந்துள்ளது.
முன்னதாக 8,000க்கும் அதிகமான பண்டைய கையெழுத்து பிரதிகள் இருந்த மொசூல் நூலகத்தை ஐ.எஸ். தீமூட்டி எரித்ததாக செய்தி வெளியாகி இருந்தது.