பிரதமரின் வருகைக்கு மாவோயிஸ்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பஸ்தார் பிராந்தியத்தில் இன்று முதல் 2 நாள் முழுஅடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து உள்ளனர். மாவோயிஸ்டுகளின் எதிர்ப்பு காரணமாக பிரதமர் மோடியின் வருகைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் பஸ்தார் மாவட்டம், மரெங்கா கிராமத்தில் 300 பொதுமக்களை நக்சலைட்டுகள் சிறைப்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி சத்தீஸ்கார் செல்ல உள்ள நிலையில் 300 பேர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.