மும்பையில் கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி அதிகாலையில் சல்மான் கானின் கார் மோதியதில், ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர். சல்மான் கான் குடிபோதையில் அதிவேகமாக காரை ஒட்டி விபத்தை ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கடந்த 13 ஆண்டுகளாக நீடித்தது. பல திருப்பங்களுக்குப் பின்னர் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்ததையடுத்து, புதன்கிழமை மும்பை அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கில் சல்மான் கான் மது அருந்திவிட்டு காரை ஓட்டியது நிரூபணமாகியுள்ளது என்றும், சல்மான் கான் குற்றவாளி என்றும் மும்பை அமர்வு நீதிமன்ற நீதிபதி தேஷ்பாண்டே அறிவித்தார். சல்மானுக்கான தண்டனை விவரம் பகல் 1.10க்கு அறிவிக்கப்படும் என்றார்.
அதன்படி பின்னர் நீதிமன்றத்தில், சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மும்பை அமர்வு நீதிமன்ற நீதிபதி தேஷ்பாண்டே அறிவித்தார்.