மருமகளுக்கு பாலியல் தெந்தரவு தந்த ஜெ பேரவைசெயலாளர்
சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் கே.ஜீ.சிங்காரவேலன். பல்லாவரம் நகர ஜெயலலிதாபேரவை செயலாளராக உள்ளார்.
இவரது மகன் விவேகானந்தன்க்கும் இவருக்கும் இடையே சொத்துதகராறு இருந்துள்ளது. அதோடு, சிங்காரவேலன் மருமகளுக்கு பாலியல் தொல்லை தந்துவந்ததாகவும் கூறப்படுகிறது. சிங்காரவேலன் மகள் சரண்யா, மருமகன் ரகு என்ற ரகுராகவன் ஆகியோர் சிங்காரவேலனுக்கு ஆதரவாக ஷாலினியைவீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியில் தள்ளி மானப பங்கப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஷாலினி கொடுத்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுபோலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து பல்லாவரம் போலீசார், சிங்காரவேலன்,அவரது மகள் சரண்யா, மருமகன் ரகு ராகவன் ஆகிய 3பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாஇன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில், “காஞ்சிபுரம்கிழக்கு மாவட்டம்,பல்லாவரம் நகர ஜெ ஜெயலலிதா பேரவை செயலாளர்பொறுப்பில் இருக்கும் கே.ஜி.சிங்காரம் இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்துவிடுவிக்கப்படுகிறார் என்று கூறியுள்ளார்.