நிந்தவு+ர் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த (07) இடம்பெற்ற இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் மோதிய இரண்டு அணிகளும் சம பலத்துடன்
காணப்பட்டதால் இறுதி நேரம் வரைக்கும் இவ்விரு அணிகள் சார்பாக எந்த கோள்களும் செலுத்தப் படவில்லை. இறுதியில் பெனால்டி முறையில் கிண்ணிய மத்திய கல்லூரி சம்பியனானது.
இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கான கிண்ணத்தினை கல்முனை கல்வி வலய உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.இப்ராஹிம் வழங்கி வைத்ததோடு, இரண்டாம் இடம் பெற்ற அணிக்கான கிண்ணத்தினை உடற் கல்வி ஆசிரியர் ஏ.எம். அன்சார் வழங்கி வைத்தார்.
இதேவேளை இந்த சுற்றுப்போட்டியில் கிழக்கு மாகாணத்தில் கிண்ணிய மத்திய கல்லூரி, மருத முனை அல்-மனார் மத்திய கல்லூரி மற்றும் மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரி ஆகிய முதல் மூன்று இடங்களைப் பெற்ற கல்லூரிகள் தேசிய ரீதி யில் இடம்பெறும் போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.