கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி மாலை 4 மணியிலிருந்து காணாமற்போன மேற்படி சிறுமியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (27) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமியின் சடலம், சிறுமி காணாமற்போன இடத்திலிருந்து 5 கிலோமீற்;றர் தொலைவிலுள்ள பொறிக்கடவை என்னுமிடத்திலுள்ள வயல் வெளியிலிருந்து கடந்த 19ஆம் திகதி, உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது.
அச்சடலத்துடன் சிறுமி காணாமற்போகும் போது அணிந்திருந்த ஆடைகள், காலணி என்பனவும் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட சடலம், கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட வைத்திய நிபுணர் குழுவால் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, அச்சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்ற விடயம் தெரியவந்துள்ளது.
இதேவேளை, சிறுமியை வாய்க்கால்வரை அழைத்துச்சென்று விட்டதாக கூறப்படும் 14 வயதுடைய சிறுவனை (பெரியம்மாவின் மகன்) கைது செய்வதற்கு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருந்த பொலிஸார், அச்சிறுவனை கடந்த 23ஆம் திகதி கைது செய்து 24ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில், நீதவானின் உத்தரவுக்கிணங்க தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையை இன்று திங்கட்கிழமை மன்றில் சமர்ப்பிக்கவுள்ள அதேவேளை, மேற்படி சிறுவனையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் மேலும் கூறினர்.
சிறுமி காணாமற்போனமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள விசேட பொலிஸ் குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள், தேடுதல்கள் மேற்கொள்