புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஆக., 2015

மத்தள விமான நிலையத்தை நெல் களஞ்சியசாலையாக மாற்றுவோம்!- ரணில்


நெல்லை களஞ்சியப்படுத்த இடம் போதாது போனால், மத்தள விமான நிலையத்தில் அவற்றை களஞ்சியப்படுத்த போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹசலக பிரதேசத்தில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மத்தள விமான நிலையத்திற்கு விமானங்கள் வரவில்லை என்றால், நெல்லை அங்கு களஞ்சியப்படுத்துவோம்.
நாங்கள் இந்த போகத்தில் ஒரு கிலோ நெல்லை 50 ரூபாவுக்கு கொள்வனவு செய்வோம். கிராமங்களுக்கு உதவ வேண்டும் என்பதே எனது தேவை.
60 மாதங்களில் புதிய நாட்டை உருவாக்க எதிர்ப்பார்த்துள்ளோம். பொருளாதாரத்தை முன்னேற்றவே நாட்டில் முதல் இடம் வழங்கப்படும்.
இந்த போகத்தில் ஒரு கிலோ நெல்லை 50 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ad

ad