சேலம் அருகே உள்ள சசிபெருமாள் சொந்த ஊரான மேட்டுக்காட்டில் அவரின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டுக்காட்டில் சசிபெருமாள் உறவினர்கள் நடத்தும் மதுவிலக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்
ஜி.ராமகிருஷ்ணன்,விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த மாதம் 31ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகேயுள்ள, உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி, காந்தியவாதி சசிபெருமாள் அங்கிருந்த செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியபோது திடீரென மரணம் அடைந்தார்.
இதையடுத்து, தமிழகத்தில் நெடுஞ்சாலை மற்றும் பள்ளி, கோவில்கள் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக மூட வேண்டும். மேலும், மதுவிலக்கு குறித்த அறிவிப்பை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சசிபெருமாள் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர்.
இந்நிலையில், உடலை நீங்கள் வாங்காவிட்டால், நாங்களே தகனம் செய்வோம் என காவல்துறை தரப்பில் இருந்து சசிபெருமாள் உறவினர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.