
உ டுவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா-2015 உடுவில் பிரதேச செயலாளர் திரு. நந்தகோபாலன் அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வட மாகாணசபை உறுப்பினருமான த.சித்தார்த்தன், வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் தி.பிரகாஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.