புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2015

வித்தியாவின் மூக்குக் கண்ணாடியை பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன், மரபணு சோதனை அறிக்கையை துரிதப்படுத்துமாறு ஊர்காவற்துறை நீதவான்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மூக்குக் கண்ணாடியை பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன், மரபணு சோதனை அறிக்கையை துரிதப்படுத்துமாறும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதவான் எஸ்.லெலின்குமார், குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வித்தியா கொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள் 9 சந்தேக நபர்களும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
கடந்த மே மாதம் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் வழக்கு விசாரணை குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், தொடரும் விசாரணைகளில் பல தடயப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்திருந்தனர்.
கடந்த நீதிமன்ற விசாரணையின் போது, வித்தியாவின் கண் பகுதியிலிருந்து கிடைக்கப்பெற்ற விந்தணுவை ஆய்வுக்குட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டபோதும் இன்றைய தினம் அது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.
மேலும் வித்தியாவின் கொலையில் 8வது சந்தேக நபர் நீதவானிடம் தங்களை பற்றி அவதூறாக பல இணையத்தளங்கள் செய்திகளை பிரசுரிக்கின்றன. அவ்வாறான இணையத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
ஆனால் நீதவான் லெனின் குமார் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் குறித்த அவதூறு தொடர்பில் பொலிஸாரிடம் முறையிடுங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரை நீதவான் ஒத்திவைத்துள்ளார்.

ad

ad