€
கைப்பந்து விளையாட்டு மீதுள்ள காதலால், இப்போதும் அவரது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் கைப்பந்து போட்டிகளை நடத்துவதை வழக்கமாக கொண்டவர் வைகோ. அப்போது, இளைஞராக மாறி கைப்பந்து விளையாடும் வைகோவையும் பார்க்க முடியும்.
அண்மையில் வைகோ, கிருஷ்ணசாமி வாண்டையார் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். பின்னர் புதுச்சேரியில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்தார். வழியில் கடலூர் அருகே, வயல்வெளி சூழ்ந்த இடத்தில், அய்யனார் கோவில் ஒன்று இருப்பதை கண்ட வைகோ, உடனே வண்டியை நிறுத்த சொல்லி இறங்கினார். அய்யனார் சிலையின் அடியில் துண்டு விரித்து அமைதியாக ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டே, தொடர்ந்து வண்டியை கிளப்பச் சொன்னார்.

€அதேபோல், நேற்று தேனி மாவட்டம் கூடலூருக்கு சென்றிருந்த வைகோ, அங்குள்ள முல்லை பெரியாற்றில் சின்ன பையன் போல ஆடிப்பாடி, குளியல் போட்ட படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
திருநெல்வேலி சென்றால் தாமிரபரணியில் குளியல் போடாமல் வைகோ திரும்பமாட்டார் என்பது கொசுறுத் தகவல்.