மண்ணுக்காக வாழ்ந்து மண்ணுடன் சங்கமமான எமது மதிப்பிற்குரிய மாசற்ர போராளி டேவிட் ஐயா!

காந்தீய அமைப்பின் தலைவர் சொலமன் அருளானந்தம் (டேவிட் ஜயா) அவர்களின் இறுதி
தமிழ் மக்களின் நலனுக்காக உண்மைதன்மையுடன் பணியாற்றி ஒரு மனிதர் டேவிட் ஜயா இவர் நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரங்களின் போது பாதிக்கப்பட்டு தென்னிலங்கையில் இருந்து வந்த மக்களை வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் மற்றும் கிழக்கு மாகாண மாவட்டங்களில் குடியேற்றுவதற்காக காந்தீய அமைப்பினை உருவாக்கி உழைத்தவர். 500 க்கு மேற்பட்ட முன்பள்ளிகளை காந்தீய அமைப்பின் மூலம் ஆரம்பித்து செயற்படுத்தி வந்தவர். இப்படி பல பணிகளை மேற்கொண்டவர் டேவிட் ஜயா அவர்கள்.
இவரின் பூதவுடல் இன்று மதியம் 1 மணிக்கு ஆனந்தபுரத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு கிளிநொச்சி புனித திரேசம்மாள் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு திருநகர் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.