புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 அக்., 2015

இரண்டு ஆணைக்குழு அறிக்கைகளும் அடுத்த வாரம் சபையில் சமர்ப்பிப்பு

உடலகம ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு ஆகியவற்றின் விசாரணை  அறிக்கைகள்  எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.அதன் பின்னர் மேற்படி அறிக்கைகள் தொடர்பிலும், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றியும் விவாதம் நடத்தப்படும் என்றும் அவர் நேற்றுமுன்தினம் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றம் நேற்றுமுன்தினம் பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பிரேரணைத்தாக்கல் ஆகியவை முடிவடைந்த பின்னர் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் பற்றிப்பிரதமர் கருத்து வெளியிட்டார். இதன்போதே மேற்படி தகவலையும் அவர் வெளியிட்டார். 
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்:-ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் விவாதம் நடத்துவதற்கு திகதி ஒதுக்குமாறு கடந்த வியாழக்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டது.உடலகம ஆணைக்குழுவின் அறிக்கை, பரணகம ஆணைக்குழு வின் அறிக்கை ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளோம். இவற்றுடன் சேர்த்து ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் தொடர் பிலும் விவாதிக்க முடியும்.
மேற்படி அறிக்கைகளை அடுத்த நாடாளுமன்ற அமர்வில் சமர்ப்பிக் கக்கூடியதாக இருக்கும். செவ்வாயன்று சமர்ப்பித்தால், வியாழனும், வெள்ளியும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடியும். இரு அறிக்கை களும் ஜனாதிபதி செயலகத்தில் இருக்கின்றன. அவை ஆங்கிலமொழியி லேயே உள்ளன. சிங்கள, தமிழ் மொழிகளில் இன்னமும் மொழிபெயர்க் கப்படவில்லை. அடுத்த நாடாளுமன்ற அமர்வில் ஆங்கில மொழியிலான அறிக்கைகளையே சமர்ப் பிக்கக்கூடியதாக இருக்கும் எனப் பிரதமர் குறிப்பிட்டார். 

ad

ad