யாழ். மத்திய கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்ற இந்த காலிறுதி ஆட்டங்களில் முதலாவது ஆட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து மானிப்பாய் இந்துக்கல்லூரி அணி மோதிக் கொண்டது. ஆட்டத்தின் ஆரம்பம் முதல் தனது கட்டுப்பாட்டை வியாபித்திருந்த நெல்லியடி மத்திய கல்லூரி அணி 6:0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது
இரண்டாவது ஆட்டத்தில் யாழ். மத்திய கல்லூரி அணியை எதிர்த்து இளவாலை சென்.ஹென்றிஸ் கல்லூரி அணி மோதிக்கொண்டது. இரு அணிகளில் ஒன்றாலும் தனித்து ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. கோல் கணக்கு ஆரம்பிக்கப்படாமலேயே முதல்பாதி முடிவடைந்தது.
இரண்டாம் பாதியிலும் இதே விடாப்பிடி நிலைமைதான். பெரிதான மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை. ஆட்டம் நிறைவடைய ஐந்து நிமிடங்கள் இருக்கையில் ஆட்டத்தில் ஒரே கோலையும் வெற்றிக்கோலையும் பதிவுசெய்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது சென்.ஹென்றிஸ்.
சென்.பற்றிக்ஸ், புங்குடுதீவு மகா வித்தியாலய அணிகள் ஏற்கனவே அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில் இன்று இடம்பெறவுள்ள அரையிறுதி ஆட்டங்களில் (யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில்) பிற்பகல் 2.30 மணிக்கு புங்குடுதீவு மகா வித்தியாலய அணியை எதிர்த்து நெல்லியடி மத்திய கல்லூரி அணியும் பிற்பகல் 3.30 மணிக்கு இளவாலை சென்.ஹென்றிஸ் கல்லூரி அணியை எதிர்த்து சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியும் மோதவுள்ளன.