புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை சந்தேக நபர்களிடையே சிறைச்சாலைக்குள் குழப்பங்கள் ஏற்பட்டதுடன், அவர்களுக்கிடையே மோதலும்
இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டுவரும் விசாரணைகளின் மூலம் மேலதிகமான சில உண்மைத்தகவல்கள் கசிந்து வருவதை அடுத்தே இவர்களுக்கடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
வித்தியா கொலைச் சம்பவம் தொடர்பில் ஆரம்பத்தில் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 11 ஆவது சந்தேக நபரும் கைது செய்யப்பட்டிருந்தார்.
11 ஆவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதன் பின்னர் வித்தியா கொலைச் சம்பவம் தொடர்பில் மேலதிக ஆதாரங்கள் பல குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் சிக்கியிருந்தது.
குறிப்பாக வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை மற்றும் கொலை செய்யப்பட்டமை ஆகியவற்றினை வீடியோ பதிவு செய்த மெமரிக்காட் மீட்கப்பட்டிருந்தது.
மீட்கப்பட்ட வீடியோவால் வழக்கு விசாரணைகளுக்கான வலுவான சான்றுகளும் குற்றப் புலனாய்வாளர்களிடம் சிக்கியுள்ளது.
மீட்கப்பட்ட வீடியோவால் வழக்கு விசாரணைகளுக்கான வலுவான சான்றுகளும் குற்றப் புலனாய்வாளர்களிடம் சிக்கியுள்ளது.
குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் 10 சந்தேக நபர்களிடமும் தனித்தனி விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.
இதற்கிடையில் இறுதியாக கைது செய்யப்பட்ட 11 ஆவது சந்தேக நபர் அரச தரப்பு சாட்சியமாக மாற்றப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் இறுதியாக கைது செய்யப்பட்ட 11 ஆவது சந்தேக நபர் அரச தரப்பு சாட்சியமாக மாற்றப்பட்டுள்ளார்.
இதனால் 11 ஆவது சந்தேக நபர் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கொடுத்தமை தொடர்பில் 10 சந்தேக நபர்களிடமும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
இதன் ஒரு அங்கமாக கடந்த வாரம் சிறைச்சாலைக்கும் இருந்த வித்தியாவின் சந்தேக நபர்களுக்குள் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் சுவிஸ் குமாரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் சிறைச்சாலையில் இருந்து உறுதிப்படுத்தும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

