இது குறித்து ஒரு தனியார் தொலைகாட்சிக்கு போட்டி அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறியதாவது.
திமுகவும், அதிமுகவும் தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய இரண்டு தொகுதியில் செய்த மொத்த செலவை கூட 234 தொகுதிகளில் எங்கள் அணியால் செய்ய இயலவில்லை.
அந்த அளவிற்கு நாங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்ததும் எங்கள் வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணம்.
ஆனால். எங்களை அதிமுகவின் பி அணி என்று முத்திரை குத்தியதற்கு காரணம், எங்களால் திமுகவிற்கு கிடைக்கிற அதிமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறி விடும் என்று அச்சப்பட்டு இவ்வளவு கடுமையான அவதூறுகளை பரப்பினார்கள்.
இந்த அவதூறும் எங்கள் அணி வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம் என திருமாவளவன் குற்றம் சாட்டியள்ளார்.