சைதை துரைசாமிக்கு ஒரு பெருமை உண்டு. சென்னை மாநகராட்சியின் முதல் அ.தி.மு.க மேயர் அவர்தான்.
5 ஆண்டு காலம் இந்த ஒரு பெருமையுடன் பதவியில் இருந்தவரால் சென்னை மாநகரத்திற்கு ஏதாவது பெருமை உண்டா என்றால் உதட்டைப் பிதுக்குகிறார்கள் சொந்தக் கட்சியின் கவுன்சிலர்களே! மேயரின் செயல்பாடு அப்படிப்பட்டது.
பேச்சு பேச்சாத்தான் இருக்கும்
மாநகராட்சியின் கடைசிக்கூட்டத்தை 3 நாட்கள் நடத்திய மேயர், அதில் பெரும்பாலான நேரம் அவரே பேசினார். ஜெ. புகழ் பாடினார். கடந்த 5 ஆண்டுகளில் 40% நேரத்தை அவரே எடுத்துக் கொண்டு, 150 கவுன்சிலர் களுக்கும் மொத்தமாக மிச்ச நேரத்தை ஒதுக்கிக் கொடுத்தவர் சைதை என்கிறார்கள் அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும். 2011-ல் மேயரானபோது முன்னாள் மேயர்களான தி.மு.க.வின் மு.க.ஸ்டாலின், மா.சுப்ரமணியன் இருவரும் சுமார் 1000 கோடி ரூபாய் நிதி இழப்புகளை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டியதையே கடைசிக் கூட்டம் வரை பேசிக் கொண்டிருந்தார் இன்றைய மேயர்.
குப்பைமேடான சென்னை
கொடுங்கையூர் கிடங்கில் மலைபோல் குவிந்து கிடக்கிறது குப்பை. இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளால் அப்பகுதியிலுள்ள மக்களை பல்வேறு நோய்கள் தாக்கி வருகிறது. மாசு கட்டுப் பாட்டு வாரியம் எச்சரித்தும் நடவடிக்கை இல்லை. இது தொடர்பாக மக்கள் தொடுத்த வழக்கின் விசா ரணை சமீபத்தில் உயர்நீதிமன்றத்தில் வந்தபோது, மாநகராட்சி ஆணையரை, குப்பை கொட்டும் இடத்தில் குடிசை போட்டுக்கொடுத்து குடியிருக் கச் சொல்ல வேண்டும். அல்லது அங்கே ஒரு நாற் காலி போட்டு 24 மணிநேரம் உட்கார வைக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் கஷ்டங்கள் புரியும். அவரால் 24 மணி நேரம் இருக்க முடியுமா? அவர் விரும்பினால் நாங்களே வீடு கட்டித்தரு கிறோம் என்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலும் நீதிபதி மகாதேவனும் மிக கடுமையாக கண்டித்தனர்.
கொசுக்கடியும் கொசுவலை ஊழலும்
""365 நாட்களும் கொசுக்கடியால் அவஸ்தைப் படுகிறார்கள் சென்னைவாசிகள். கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நல்லா, மாம்பலம் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய் உள்பட 30-க்கும் மேற்பட்ட நீர்வழித்தடங்கள் சென்னையை சுற்றி ஓடுகின்றன. கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீர்வழித்தடங்களின் பராமரிப்பிற்காக மத்தியஅரசின் ஜவஹர்லால் நேரு புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 800 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ள நிலையில் திட்டம் மட்டும் முடங்கி விட்டது. இதனால் இந்த நீர்வழித்தடங்களில் கொசுக்கள் மூலமாக டெங்கு, சிக்குன்குனியா நோய்கள் பரவுகின்றன. ""இவற்றை மூடி மறைத்து மர்மக் காய்ச்சல் என சொல்லிச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறது'' என்கிறார் சென்னை மாநகர சமூக சேவகர் மணி.
கடன் சுமையும் காண்ட்ராக்டர்களும்
கடந்த 5 வருடங்களாக நிதி நெருக்கடியிலேயே மாநகராட்சி நகர்ந்து வந்திருக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டமைப்பு வளர்ச்சிக்காக உலக வங்கி மற்றும் ஜப்பான், ஜெர்மன் வங்கிகளிடமிருந்தும் பல்வேறு நிதி நிறு வனங்களிடமிருந்தும் கடன் பெற்றுள்ளது மாநகராட்சி நிர் வாகம். இதனால் மாநகராட்சியின் கடன் சுமை ரூ.3000 கோடிக்கும் அதிகமாக வளர்ந்து நிற்கிறது. காண்ட்ராக்டர்களுக்கு 600 கோடி ரூபாய் பாக்கி உள்ள நிலையில், எந்தக் கட்டமைப்பு வசதியும் தரமானதாக இல்லை. 25 சதவீத மேலிட கமிஷனை முன்கூட்டியே தரும் காண்ட்ராக்டர்களுக்கு மட்டுமே டெண்டர் செட்யூல்டு தரப்பட்டன. இது போக மேலிருந்து கீழ்மட்டம் வரையிலான அதி காரிகளுக்கு 25% போய்விடும். கட்டுப்படியாக வில்லை என பல காண்ட்ராக்டர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். 5 ஆண்டுகளில் மேயரும் ஆளும் கட்சி கவுன்சிலர்களுமே வளமடைந்தனர். தன் னையே ஏமாற்றிய இவர்களை நம்பி மாநகராட்சி தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்பதால்தான் ஆட்சியாளர்களுக்கு தோதான ஐ.ஏ.எஸ் அதிகாரியான கார்த்திகேயனை கமிஷனராக நியமித்திருக்கிறார் ஜெயலலிதா.