அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக அக் டோபர் 1-ந் தேதி நேரில் வந்த பொறுப்பு ஆளுநர் வித்யா சாகர்ராவ் அங்கிருந்து திரும்பிச் சென்றபிறகு, ஆளுநர் மாளிகை யிலிருந்து அறிக்கை வெளியானது. அதில், ""முதல்வர் அனுமதிக் கப்பட்டுள்ள வார்டுக்கு சென்று, அவருடைய உடல் நிலை குறித்து டாக் டர்களிடம் கேட் டறிந்து, முதல்வர் நன்கு முன்னேறி வருவதை அறிந்து ஆளுநர் மகிழ்ச்சியுற்றார் என்றும், முழு உடல்நலன் பெற வாழ்த்துகள் தெரிவித்தார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மக்களிடம் தெளிவை ஏற்படுத்தவேண்டிய பொறுப்பு கவர்னரின் வருகை, மேலும் குழப்பத்தையே உண்டாக்கியது. காரணம், முதல்வரிடம், கவர்னர் நேரடியாக உடல்நலன் விசாரித்தாரா என்பது அந்த அறிக்கையில் விளக்கப்படாமல், கவனமாகத் தவிர்க்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப்பணிகளைத் தொய்வின்றி முதல்வர் கவனிக்கிறார் என்றும், காவிரி விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஒருமணி நேரம் ஆலோசனை நடத்தினார் என்றும் அரசு சார்பிலான அறிக்கைகள் வெளியானதுடன், அ.தி.மு.க.வின் உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் பட்டியலையும் முதல்வர் வெளியிட்டார் என ஊடகங்கள் தெரிவித்த நிலையில், ஊரறிய -ஊடகமறிய தன்னை சந்திக்க வந்த ஆளுநரிடம் முதல்வர் என்ன பேசினார் என்பது தெரிவிக்கப்படவில்லை.
(இது குறித்து அக். 03-05 இதழில் தனிக் கட்டுரை வெளியாகி யிருந்தது. அதில் பழனி ஜி.பெரியசாமியை "மருத்துவர்' எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டிருப்பதைத் திருத்தி, "தொழிலதிபர்' என வாசிக்க வேண்டுகிறோம்)
அமெரிக்க மருத்துவமனையில் இருந்தபடியே தமிழக சட்டமன்றத் தேர்தல்களத்தை சந்தித்து வெற்றி பெற்றார் எம்.ஜி.ஆர். 1985ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ந் தேதி சென்னை திரும்பினார். தமிழகத்தில் பரவியிருந்த வதந்திகளுக்கு மாறாக அவர் நலமுடன் இருந்தபோதும் பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். உடல் தளர்வாகவும் காணப்பட்டார். அப்படிப்பட்டவர் எப்படி முதல்வர் பொறுப்பை ஏற்று செயல்பட முடியும் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அப்போது கவர்னராக இருந்த எஸ்.எல்.குரானா, He is physically and mentally fit’ (உடல் ரீதியாகவும் மன ரீதியாவும் அவர் சரியாக இருக்கிறார்) என்று எம்.ஜி.ஆருக்கு -சர்டிபிகேட் தந்தார். பிப்ரவரி 10-ந் தேதி ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடந்த பதவியேற்பு விழா ஏறத்தாழ ஒரு ரகசிய நிகழ்வுபோலவே அமைந்தது. அரசுத் தரப்பில் தரப்பட்ட பதவியேற்பு விழா புகைப்படங்களை பத்திரிகைகள் வெளியிட்டன.
கவர்னர் குரானாவின் இந்தச் செயல் அப்போது எதிர்க்கட்சிகளாலும் அரசியல் வல்லுநர்களாலும் விமர்சிக்கப் பட்டபோதும், அவர் எம்.ஜி.ஆர். தலைமையிலான அரசுக்கு ஒத்துழைப்பாக இருந்தார். 1991-96ல் ஜெ. முதன்முறையாக முதல்வராக இருந்தபோது கவர்னராக இருந்தவர் பீஷ்மநாராயண சிங், அரசு நிறுவனமான டான்சியின் நிலத்தை முதல்வர் ஜெய லலிதா, தனது சொந்த நிறுவனத்துக்காக குறைந்த விலையில் வாங்கி ஊழல் செய்தது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து, அதன் மீது விசாரணை நடத்தவேண்டும் என சுப்பிரமணியசாமி கோரியபோது, அனுமதிக்க மறுத்தார் கவர்னர்.
அவருக்குப்பின் கவர்னரான சென்னாரெட்டி, டான்சி நில ஊழல் குறித்து விசாரணை நடத்த அனுமதி வழங்கியதால், கவர்னரின் காரை அ.தி.மு.க.வினர் வழிமறிக்கும் அளவுக்கு நிலைமை சென்றது. கவர்னரின் நடவடிக்கைகள் குறித்து தனிப்பட்ட விமர்சனத்தை வைத்தார் முதல்வர்.
அந்த டான்சி வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு 2001 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாத ஜெயலலிதாவுக்கு, தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளே அவசர அவசரமாகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் அப்போதைய கவர்னர் ஃபாத்திமா பீவி, இந்தப் பதவியேற்பு செல்லாது என உச்சநீதிமன்றம் ரத்து செய்த துடன், கவர்னர் ஃபாத்திமா பீவியின் செயலையும் கண்டித்தது.
2011-16 ஜெ. ஆட்சிக் காலத்தில் பர்னாலாவுக்குப் பிறகு ஆளுநரான ரோசய்யா, சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெ.வை விடுவித்தபின் நடந்த பதவியேற்பு விழாவில், சுருக்கமாக தேசியகீதம் பாடி -கோரஸாக அமைச்சர்கள் பதவியேற்க சட்டரீதியாக உதவினார். தற்போது பொறுப்பு ஆளுநராக உள்ள வித்யாசாகர்ராவ், அ.தி. மு.க. ஆட்சிக் கால ஆளுநர்களுக்குரிய வழி யிலேயே செயல்பட்டி ருப்பதைத்தான் அவரது அப்பல்லோ சந்திப்பு காட்டுகிறது