தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்ததோடு, இருதய நோயாலும் நீண்டகாலமாக அவதியுற்று வந்திருந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.போதான வைத்தியசாலையில் அவர் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழர்களின் போராட்டத்தின் நியாயத்தையும் உண்மைத் தன்மையையும் உணர்ச்சி ததும்ப வெளிக்கொணர்ந்த பெருமை சாந்தனையே சாரும். இதற்கென, விடுதலைப் புலிகளின் தலைவரால் பலமுறை கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.