-

28 பிப்., 2018

வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சற்றுமுன்னர் கைது!

வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சற்றுமுன் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுவாகல் பகுதியில் கடந்த 22ஆம் திகதி மக்களின் காணிகளை கடற்படை முகாம் அமைப்பதற்காக அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் மேற்கொண்டமை தொடர்பில் ரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்க பட்ட நிலையில் ரவிகரன் இன்றையத்தினம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் அஜராகியிருந்தார் .

இதன் போது ரவிகரனிடம் விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.அத்தோடு ஆர்பாட்டம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் சமூக செயற்பாட்டாளரும் முன்னாள் பிரதி அவைத்தலைவர் அமரர் ஆன்டனி ஜெகநாதனின் மகன் பீற்றர் இலஞ்செழியனும் விசாரணைக்காக அழைக்கப்பட்டு கைது செய்யபட்டுள்ளார்.

ad

ad